பெருநிறுவனங்களின் கடன் தள்ளுபடியை தடுக்க சட்டம் வேண்டும்: கெஜ்ரிவால் வலியுறுத்தல்

புதுடெல்லி, 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. என 3 முக்கிய கட்சிகள் மும்முனை போட்டியை ஏற்படுத்தி உள்ளன. தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பல்வேறு கட்சியினர் டெல்லியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி கட்சி தீவிரம் … Read more

இலங்கை – ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் நாளை தொடங்குகிறது

கொழும்பு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை காலே மைதானத்தில் தொடங்க உள்ளது. நாளை காலை 10 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது இந்த தொடருக்கான இலங்கை அணியின் கேப்டனாக தனஞ்சயா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார் . ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்பட உள்ளார். தினத்தந்தி Related Tags : டெஸ்ட்  இலங்கை  … Read more

மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு: இலங்கை கடற்படை அளித்த விளக்கம் என்ன..?

கொழும்பு, இந்திய மீனவர்கள் துப்பாக்கியை பறிக்க முயன்றதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக இலங்கை கடற்படை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன்படி, “நேற்று (ஜனவரி 27ம் தேதி) இரவு யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறைக்கு அருகில் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடித்த இந்திய மீன்பிடிப் படகுகள் கூட்டத்தை வடக்கு கடற்படை கட்டளை பிரிவு கவனித்தது. அதைத் தொடர்ந்து, வடக்கு கடற்படை கட்டளை பிரிவு, அந்த மீன்பிடிப் படகுகளை தீவுக் கடற்பரப்பிலிருந்து அனுப்ப ஒரு சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டது, இந்த நடவடிக்கையின் போது, இலங்கைக் கடற்பரப்பில் … Read more

Varun Chakaravarthy : 'முடிஞ்சா தொட்டுப் பார்!' – மீண்டும் ஒரு 5 விக்கெட் ஹால்; அசத்தும் வருண்

2021 உலகக்கோப்பையில் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு கிடைத்தபோது அவரின் மிஸ்டரி பௌலிங்கின் மூலம் எதையோ செய்யப்போகிறார் எனத் தோன்றியது. ஆனால், எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. ஒரு சில போட்டிகளில் ஆடினார். நினைவில் நிற்கும் வகையில் எந்த செயல்பாட்டையும் கொடுக்கவில்லை. பெருத்த ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. ஐ.பி.எல் இன் வழி நேராக கிடைத்த வாய்ப்பை வருண் விரயம் செய்தார். அதன்பிறகு பிசிசிஐயின் பார்வையும் அவர் மீது விழவில்லை. வருண் வருணின் கதை அவ்வளவுதான் எனத் தோன்றியது. ஆனால், மீண்டும் … Read more

காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்க முயல்வது ஏன்? – அண்ணாமலை காட்டம்

சென்னை: “அம்மா உணவகங்களில், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவை தயாரிக்காமல், தனியாருக்குத் தாரை வார்க்க இரண்டு ஆண்டுகளாக முயற்சிப்பது ஏன்?” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் உள்ள சுமார் 350-க்கும் அதிகமான பள்ளிகளில், 65,000-க்கும் அதிகமான மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்துக்குகு, அம்மா உணவகங்களில் உணவு தயார் செய்யப்படுகிறது. இதன் மூலம், அம்மா உணவகங்களில் பணிபுரிவோருக்கு, நிலையான வருமானம் கிடைக்கப்பெற்று வந்தது. கடந்த 2023-ம் … Read more

அரசுகளிடம் இருந்து கோயில்கள் மீட்கப்பட வேண்டும்: மகா கும்பமேளாவில் துறவிகளின் தர்மசபையில் தீர்மானம்

புதுடெல்லி: இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களின் அரசுகளிடமிருந்து அனைத்து கோயில்களும் மீட்கப்பட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்று (ஜன.28) பிரயாக்ராஜின் மகா கும்பமேளாவில் துறவிகளின் தர்மசபை கூடி விவாதித்தது. உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜின் மகா கும்பமேளாவில் இன்று துறவிகள் தர்மசபை நடத்தினர். திரளாக வருகைவந்த துறவிகளுடன் பாஜக எம்.பி.யும் பாலிவுட் நடிகையுமான ஹேமாமாலினி, நடிகர் சுனில் ஷெட்டி உடன் வந்திருந்தார். இந்த சபைக்கு தலைமை தாங்கிய ஆன்மிகச் சொற்பொழிவாளரான தேவகிநந்தன் தாகூர் பேசுகையில்,‘இதுவரை … Read more

அமெரிக்க ஜாம்பவான்களை ஆட்டம் காண வைத்த ‘DeepSeek’ நிறுவனர் – யார் இந்த லியான் வென்ஃபெங்?

சாட்ஜிபிடி, ஜெமினி, மெட்டா, க்ரோக் ஆகிய ஏஐ அசிஸ்டன்ட்கள் வரிசையில் தற்போது உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது டீப்சீக் (DeepSeek). டீப்சீக் தொடங்கப்பட்டு 20 மாதங்களே ஆகின்றன. ஆனால் தனது புரட்சிகரமான AI அசிஸ்டன்ட் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல், ஏஐ-க்கான புதிய அணுகுமுறையுடன் உலக சந்தையையும் ஆட்டம் காண வைத்துள்ளது. இதன் வருகையால் அமெரிக்க நிறுவனங்கள் ஏற்கெனவே செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றன. இந்த சூழலுக்கு நடுவே டீப்சீக்கின் வெற்றி அதன் நிறுவனர் லியாங் வென்ஃபெங்கை … Read more

4வது காலாண்டில் போயிங் நிறுவனத்திற்கு ரூ. 35000 கோடி இழப்பு… 2019 முதல் ரூ. 3 லட்சம் கோடி இழப்பு…

போயிங் நிறுவனம் நான்காவது காலாண்டில் $3.8 பில்லியன் இழப்பை சந்தித்துள்ளதாக செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல் காரணமாக போயிங் விமான உற்பத்தி நிறுவனம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 2019 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மேக்ஸ் ஜெட் விமானங்கள் இரண்டு விபத்துக்குள்ளானதில் 346 உயிரிழந்ததை அடுத்து அந்த ஆண்டு முதல் 35 பில்லியன் டாலருக்கும் அதிகமான இழப்பை சந்தித்துள்ளது. 2024ம் ஆண்டில் மட்டும் மொத்தமாக $11.8 பில்லியன் இழப்பைப் பதிவு செய்தது. இதனால் … Read more

டெல்லி தேர்தல்; 27 தலைவர்களை பிரசாரத்திற்கு களமிறக்கும் பா.ஜ.க.

புதுடெல்லி, 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. என 3 முக்கிய கட்சிகள் மும்முனை போட்டியை ஏற்படுத்தி உள்ளன. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10-ந்தேதி தொடங்கியது. 17-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. 18-ந்தேதி வேட்புமனு பரிசீலனை நடந்தது. 20-ந்தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி … Read more

ரஞ்சி கோப்பை: ரெயில்வே அணிக்கு எதிராக களமிறங்கும் விராட் கோலி

புதுடெல்லி, சமீபத்தில் நடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி தோல்வி கண்டது. இதில் ரோகித் சர்மா, விராட்கோலி உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் சோபிக்கவில்லை. இதன் காரணமாக ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும் உள்ளூர் போட்டிகளில் வீரர்கள் அனைவரும் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் வலியுறுத்தினர். இதையடுத்து உடல் தகுதி பிரச்சினை இல்லாத சமயத்தில் உள்ளூர் போட்டிகளில், கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்த வீரர்கள் … Read more