குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் காங்கிரஸார் பாதயாத்திரை

சென்னை: குடியரசு தினத்​தையொட்டி சென்னை​யில் காங்​கிரஸார் பாதயாத்​திரை மேற்​கொண்​டனர். நாட்​டின் 76-வது ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை​யில் தமிழக காங்​கிரஸ் தலைவர் செல்​வப்​பெருந்தகை தலைமை​யில், சட்டப்​பேரவை காங்​கிரஸ் தலைவர் ராஜேஸ்​கு​மார் முன்னிலை​யில் அக்கட்​சி​யினர் பாதயாத்​திரை சென்​றனர். ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய்சம்வி​தான் (சட்டம் இயற்றியநாள்) பிரச்​சா​ரத்தை முன்னிலைப்​படுத்​தும் வகையில் சென்னை மணிக்கூண்டு அருகில் இருந்து புறப்​பட்ட பாதயாத்​திரை காங்​கிரஸ் கட்சி​யின் தலைமை அலுவல​கமான சத்தி​யமூர்த்தி பவன் வரை நடைபெற்​றது. பாதயாத்​திரை​யில் காந்தி, அம்பேத்கர் … Read more

மகாராஷ்டிராவில் 100+ பாதிப்பு, ஒரு ‘சந்தேக’ மரணம் – ‘கில்லியன் பேர் சிண்ட்ரோம்’ நோய் என்றால் என்ன?

மும்பை: மகாராஷ்டிராவில் ‘கில்லியன் பேர் சிண்ட்ரோம்’ நோய் பாதிப்பு ஏற்பட்டு ஒருவர் உயிரிழிந்திருப்பதாக முதற்கட்ட மருத்துவ ஆய்வுகள் அடிப்படையில் சந்தேகிக்கப்படுகிறது. இதற்கிடையில் புனேவில் இந்நோய் பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது. 5 நாள் சிகிச்சைக்குப் பின்.. மகாராஷ்டிராவின் சோலாபூர் மாவட்டத்தில் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது. குறிப்பிட்ட அந்த நபர் தனிப்பட்ட வேலைகளுக்காக சொந்த கிராமத்துக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சளி, இருமல் தொந்தரவு ஏற்பட்டு பின்னர் மூச்சுத் திணறல் ஆகியுள்ளது. … Read more

வந்தாச்சு பொது சிவில் சட்டம்… இன்று முதல் உத்தராண்டில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?

Uniform Civil Code: இந்தியாவில் முதல் மாநிலமாக பொது சிவில் சட்டம் உத்தரகாண்டில் இன்று முதல் அமலாகும் நிலையில், அங்கு என்னென்ன மாற்றங்கள் ஏற்படப்போகின்றன என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.

அக்னி வீர் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேர விருப்பமா? இந்த தேதியை குறிச்சு வச்சுக்கோங்க

Agniveer Recruitment | அக்னி வீர் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேர விரும்பும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு குட் நியூஸ் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

Vishal: “மிஷ்கினுக்கு இதே வேலையா போச்சு…" – காட்டமாகப் பேசிய விஷால்

இயக்குநர் மிஷ்கின், பட நிகழ்ச்சி ஒன்றில் பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து மிஷ்கின் அவர் பேசியதற்காக நேற்று (ஜனவரி 26) மன்னிப்புக் கோரியிருந்தார். இந்நிலையில் ‘மிஷ்கினுக்கு இதே வேலையா போச்சு.. தவறாக பேசிட்டு மன்னிப்பு கேட்பதே அவருக்கு வழக்கமாகிவிட்டது’ என நடிகர் விஷால் விமர்சித்திருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், ‘”யாரை வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் மேடை நாகரிகம் என ஒன்று இருக்கிறது. இசையமைப்பாளர் இளையராஜாவை அவன், இவன் என்று மேடையில் பேச … Read more

டங்ஸ்டன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் வாபஸ் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

மதுரை: டங்ஸ்டன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் வாபஸ்  பெறப்படுவதாக  தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தபடி, மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக போராடிய மக்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள அரிட்டாப்பட்டி கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமையை ஒன்றிய அரசு வழங்கியதை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு பலமுறை … Read more

Maha kumbh mela: “மகா கும்பமேளா அனைத்து மதத்துக்குமானது..'' -யோகி ஆதித்யநாத் கூறுவதென்ன?

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் கடந்த 13-ம் தேதி தொடங்கிய மகாகும்பமேளா பிப்ரவரி 26 வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “சனாதன தர்மம் இந்தியாவின் தேசிய மதம். அது மனிதகுலத்தின் மதம். இந்தியாவில் பல்வேறு வழிபாட்டு செயல்முறைகள் இருக்கலாம். ஆனால் மதம் ஒன்றுதான். அது சனாதன தர்மம் மட்டும்தான். கும்பமேளா நிகழ்வு அந்த சனாதன தர்மத்தின் ஒரு பிரதிநிதி. 2025 கும்பமேளா … Read more

இந்தியாவில் சனாதன சட்டமே இயங்கி வருகிறது திருமாவளவன் கருத்து

சென்னை: இந்தியாவில் சனாதன சட்டமே இயங்குவதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர்கள் பேரவை சார்பில் சென்னையில் நேற்று ‘இந்திய குடியரசும் டாக்டர் அம்பேத்கரும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது: அரசமைப்புச் சட்டம் அனைத்து தளங்களிலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. உச்சநீதிமன்றத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே நீதிபதிகளாக இருக்க முடியும் என்ற சூழல் ஏன் நீடிக்கிறது? அங்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாத நெருக்கடியை எது தருகிறது. … Read more

பார்வையாளர்களை கவர்ந்த பிரதமரின் தலைப்பாகை

புதுடெல்லி: கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு குடியரசு தின விழாவின்போதும் பல்வேறு மாநிலங்களின் தலைப்பாகைகளை பிரதமர் நரேந்திர மோடி அணிந்து வருகிறார். இந்த வரிசையில், பிரதமர் நேற்று ராஜஸ்தானின் ஜோத்பூர் பகுதியை சேர்ந்த பந்தானி தலைப்பாகையை அணிந்திருந்தார். மஞ்சள் நிறத்திலான அந்த தலைப்பாகை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. விழா முடிந்த பிறகு பார்வை யாளர்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நோக்கி கையசைத்து வாழ்த்து தெரிவித்தார். ‘அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அனைவருக்கும் … Read more

ஐபிஎல் 2025: சம்பவம் செய்யப்போகும் இந்த 4 வெளிநாட்டு வீரர்கள் – இவர்களை தடுப்பது கஷ்டம்!

IPL 2025 Latest News Updates: ஐபிஎல் 2025 தொடர் வரும் மார்ச் 21ஆம் தேதி தொடங்க உள்ளது. இன்னும் முழுமையான அட்டவணை வெளியாகவில்லை. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப். 19ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், அந்த தொடரின் மத்தியிலோ அல்லது மார்ச் 9ஆம் தேதி தொடர் நிறைவேற்ற பின்னரோ ஐபிஎல் தொடரின் முழு அட்டவணையும் வெளியிடப்படலாம். இந்த முறையும் அதே 10 அணிகள், இம்பாக்ட் வீரர்கள் விதியுடன் களமிறங்க உள்ளன. கடந்தாண்டு நவ. 24, … Read more