மகா கும்பமேளாவில் பிரதமர் மோடி புதன்கிழமை புனித நீராடல்!

புதுடெல்லி: பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 5-ம் தேதி (புதன்கிழமை) பயணம் மேற்கொள்கிறார். சங்கமத்தில் புனித நீராடி, கங்கை அன்னைக்கு பிரார்த்தனை செய்கிறார் என்று பிரதமர் அலுவலக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

‘பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 5-ம் தேதி பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா 2025-க்கு பயணம் மேற்கொள்கிறார். காலை 11 மணியளவில், அவர் சங்கமத்தில் புனித நீராடி, கங்கை அன்னைக்கு பிரார்த்தனை செய்வார். பௌஷ் பூர்ணிமாவில் (ஜனவரி 13, 2025) தொடங்கிய மகா கும்பமேளா 2025, உலகின் மிகப்பெரிய ஆன்மிக மற்றும் கலாச்சார ஒன்று கூடலாகும். இது உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்களை ஈர்க்கிறது. மகா கும்பமேளா பிப்ரவரி 26-ம் தேதி மகா சிவராத்திரி வரை தொடரும்.

இந்தியாவின் ஆன்மிக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் தமது உறுதிப்பாட்டிற்கு இணங்க, புனித யாத்திரைத் தலங்களில் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்துவதற்கு பிரதமர் மோடி தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முன்னதாக, டிசம்பர் 13, 2024 அன்று பிரயாக்ராஜுக்கு பயணம் செய்தபோது, ​​பிரதமர் மோடி ரூ.5,500 கோடி மதிப்பிலான 167 மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இது பொதுமக்களுக்கான இணைப்பு, வசதிகள் மற்றும் சேவைகளை மேம்படுத்தியது’ என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.