புனித நகரமான பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் பொருட்கள் மற்றும் சேவைகள் மூலம் ரூ.3 லட்சம் கோடி (USD 360 பில்லியன்) வர்த்தகம் நடந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்துள்ளது என்று அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் (CAIT) பொதுச் செயலாளர் மற்றும் சாந்தினி சௌக் எம்.பி. பிரவீன் கண்டேல்வால் தெரிவித்தார். 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் மகா கும்பமேளா ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை பிரயாக்ராஜில் நடைபெறுகிறது, […]
