நிர்மலா சீதாராமனின் பட்டுச்சேலையின் நெகிழ்ச்சி பின்னணி

புதுடெல்லி, பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று காலை 10.52 மணிக்கு நாடாளுமன்ற மக்களவைக்கு வந்தார். அவரை மத்திய மந்திரிகள், பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். தனது 8-வது பட்ஜெட்டை தாக்கல் செய்ய வந்த மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், வெள்ளை நிறத்தில் தங்க நிற பார்டர் அமைந்த பட்டுச் சேலையும், சிவப்பு நிற ரவிக்கையும் அணிந்து இருந்தார். அவர் கட்டியிருந்த பட்டுச்சேலை பீகார் மாநிலத்தின் மதுபானி … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; முகமதின் அணியை பந்தாடிய மோகன் பகான்

புதுடெல்லி , 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற 2வது ஆட்டத்தில் முகமதின் – மோகன் பகான் அணிகள் ஆடின. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் மோகன் பகான் அணி 3 கோல்களை அடித்து அசத்தியது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்திலும் மோகன் பகான் அணி ஒரு கோல் … Read more

அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: 8 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

அரூர்: அரூர் அரசுப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 8 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சத்துணவில் பல்லி இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தருமபுரி மாவட்டம் அரூர் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் அரூர் மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த 915 மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பயிலும் சுமார் 340 மாணவிகளுக்கு மதியஉணவு தயார் செய்யப்படுவது வழக்கம். அதன்படி நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் மாணவிகளுக்கு சத்துணவு … Read more

தேர்தல் களமான பிஹாருக்கு மத்திய பட்ஜெட் 2024-ல் அதிக நிதி, புதிய திட்டங்கள்!

புதுடெல்லி: 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிலையில், பிஹாருக்கு அதிகப்படியான நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது. இது குறித்து கேள்வி எழுப்பி, எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டனர். பிஹாரில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்திய பட்ஜெட்டில் அம்மாநிலத்துக்கு மட்டுமே ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. அதே வேளையில், மத்திய பாஜக கூட்டணி ஆட்சியில், பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் பங்கு அளப்பரியது. அவரை திருப்திப்படுத்தவும், ஆட்சியை காப்பாற்றி … Read more

வக்பு வாரிய திருத்த மசோதா அறிக்கை: நாடாளுமன்றத்தில் நாளை மறுநாள் தாக்கல்

புதுடெல்லி, வக்பு சொத்துக்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களை களைவதற்காக தற்போது அமலில் உள்ள வக்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வக்பு சட்டத்திருத்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்படடது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் மசோதா, நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் (ஜேபிசி) ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. பா.ஜ.க. எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழு 30-க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தி மசோதா தொடர்பாக … Read more

எஸ்.ஏ.20 ஓவர் லீக்: பார்ல் ராயல்ஸ் அணியை வீழ்த்திய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப்

க்பெஹர்கா, ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20 ஓவர் லீக்) கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இந்நிலையில், இந்த தொடரில் இன்று மாலை க்பெஹர்காவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப் – பார்ல் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 148 ரன்கள் எடுத்தது. … Read more

ஜெர்மனி முன்னாள் அதிபர் ஹோர்ஸ்ட் கோஹ்லர் காலமானார்

பெர்லின், ஜெர்மனி நாட்டின் முன்னாள் அதிபரும், சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் தலைவருமான ஹோர்ஸ்ட் கோஹ்லர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவர்க்கு வயது 81. ஹோர்ஸ்ட் கோஹ்லர் ஜெர்மனியின் அதிபராக 2004 முதல் 2010 வரை பதவியில் இருந்தார். இரண்டாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 2010-ம் ஆண்டு மே 31-ந்தேதி தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார். ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்ட ஜெர்மன் ராணுவத்தினரை சந்தித்த பிறகு அவர் அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியதால் கோஹ்லர் தனது பதவியை … Read more

மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு தொழில், வர்த்தக சபைகள் வரவேற்பு

மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு தொழில், வர்த்தக சபைகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய (ஃபியோ) தென்மண்டல தலைவர் பா.கோபாலகிருஷ்ணன்: மத்திய பட்ஜெட் தனிநபர் வளர்ச்சி, தொழில் துறை முன்னேற்றம், ஏற்றுமதி வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் உருவாக்கும். பொருளாதார வளர்ச்சியுடன், அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய இந்த பட்ஜெட் வரவேற்கத்தக்கது. தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் வி.கே.கிரீஷ் பாண்டியன்: எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கான கிரெடிட் கார்டு உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டது, எஸ்சிஎஸ்டி பெண் … Read more

நிர்மலா சீதாராமனின் ‘பட்ஜெட் நாள்’ சேலையின் நெகிழ்ச்சிப் பின்னணி கதை!

புதுடெல்லி: பிஹாரின் சுயாதீன மதுபானி கலைஞரான துலாரி தேவிக்கும், அந்தக் கலைக்கும் மரியாதை செய்யும் விதமாக இன்று (சனிக்கிழமை) பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் உடுத்தி வந்த சேலை வழக்கம் போல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நாட்டின் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட்டாகும். ஒவ்வொரு பட்ஜெட்டை தாக்கலைப் போலவே அவர் அணிந்திருக்கும் சேலையும் எதிர்பார்ப்பைகளை உருவாக்கும். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் ஜவுளி … Read more

பட்ஜெட் உரையில் திருக்குறள், தெலுங்கு கவிஞரின் கருத்தை சுட்டி காட்டிய நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனாதிபதி உரையுடன் நேற்று (ஜன.31) துவங்கியது. அப்போது மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டு கூட்டத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். இந்நிலையில், இன்று (பிப்.,01) முற்பகல்11 மணிக்கு நாடாளுமன்றத்தில் 2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மத்தியில் பாஜக தலைமையிலான அரசின் ஆட்சியில் 3வது முறையாக தாக்கல் செய்யப்பட்ட முழு பட்ஜெட் இதுவாகும். தொடர்ந்து 8வது முறையாக நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். … Read more