டெல்லி சட்டப்பேரவையில் அமளி: ஆதிஷி உள்ளிட்ட 12 எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்த அம்பேத்கர் புகைப்படத்தை நீக்கிவிட்டு பிரதமர் மோடியின் படம் வைக்கப்பட்டதாக கூறி டெல்லி சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட 12 எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுடன் மூன்று நாள் டெல்லி சட்டமன்றக் கூட்டம் நேற்று (பிப்.24) தொடங்கியது. பாஜக மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சபாநாயகர் விஜேந்தர் குப்தா தலைமையில் சட்டமன்றத்தில் பதவியேற்றனர். 2-வது நாளான இன்று, முந்தைய ஆம் ஆமி கட்சி அரசாங்கத்தின் செயல்திறன் குறித்த சிஏஜி அறிக்கைகளை பாஜக … Read more

அஜித்தின் 64வது பட இயக்குநர் யார்? லைன் கட்டி நிற்கும் 4 பெரிய இயக்குநர்கள்..

AK 64 Movie Director : அஜித்குமார், தனது 64வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை இயக்க இருப்பவர் யார் என்பது குறித்த போட்டி தற்போது நிலவி வருகிறது.  

ஜியோ வழங்கும் அசத்தல் பிளான்… 912.5GB டேட்டாவுடன் ஜியோ சினிமா இலவச சந்தா

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், நமது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், அவ்வப்போது குறைந்த கட்டணம் கொண்ட ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வருகிறது. தனது வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளுக்கு ஏற்ப, பல்வேறு திட்டங்களை வடிவமைத்து, அதை மலிவான விலையில் கொடுக்க முயற்சிக்கும் நிறுவனங்களில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதலிடம் வகிக்கிறது எனலாம். ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கான நீண்டகால வேலிடிட்டி கொண்ட திட்டம்  அடிக்கடி ரீசார்ஜ் செய்யும் தொல்லையிலிருந்து விடுபட நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு, நீண்டகால வேலிடிட்டி கொண்டு … Read more

500 பேருக்கு வேலைவாய்ப்பு: சென்னை தகவல் தரவு மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்..

சென்னை: 500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க உள்ள,  சென்னை தகவல் தரவு மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை காணொளி காட்சி மூலம்  திறந்து வைத்தார் . சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது,    CtrlS குழுமம் ரூ.4,000 கோடி முதலீட்டில் அம்பத்தூரில் அமைத்துள்ள சென்னை தகவல் தரவு மையத்தை காணொலிக் காட்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்வாயிலாக திறந்து வைத்தார்.  இந்த மையம் மூலம் சுமார்ல  500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“எனக்கும் திருமணம் செய்ய ஆசைதான், ஆனால்… " – பதிலளித்த நடிகை சுஷ்மிதா சென்

பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் இது வரை திருமணமே செய்து கொள்ளவில்லை. ரோஹ்மன் என்பவருடன் காதல் உறவில் இருப்பதாக வெளிப்படையாக அறிவித்தார். அதன் பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர். அதோடு கடந்த 2023ம் ஆண்டு திடீரென ஐ.பி.எல் முன்னாள் தலைவர் லலித் மோடி, நடிகை சுஷ்மிதாசென்னுடன் விடுமுறையை கொண்டாடுவது போன்ற புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்தார். ஆனால் அதன் பிறகு அவர்களுக்குள் என்ன நடந்தது என்று தெரியவில்லை. லலித் மோடி வேறு ஒரு பெண்ணை காதலிப்பதாக சமீபத்தில் சோசியல் … Read more

“திமுக நிர்வாகத் திறமையின்மையை திசைதிருப்ப லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை” – இபிஎஸ் சாடல்

சென்னை: திமுக நிர்வாகத் திறமையின்மையை மறைக்க, திசைதிருப்பவே கோவை வடக்கு அதிமுக எம்எல்ஏ அம்மன் கே.அர்சுனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் அர்ச்சுனன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை ஏவியுள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு … Read more

பேருந்து நடத்துநர் தாக்கப்பட்ட விவகாரம்: கர்நாடகா – மகாராஷ்டிரா இடையே போக்குவரத்து நிறுத்தம்

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள பெலகாவியில் மாநில அரசு பேருந்தின் நடத்துநர் மராத்தியில் பேசாததால் தாக்கப்பட்டார். இதை கண்டித்து நடந்துவரும் போராட்டத்தால் 3 நாட்களாக கர்நாடகா, மகாராஷ்டிரா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கர்நாடக மாநிலம் பெலகாவியில் கடந்த 21-ம் தேதி மாநில அரசுப் பேருந்தின் நடத்துநர் மல்லப்பா ஹுக்கேரிக்கும் பேருந்தில் பயணித்த 15 வயது சிறுமிக்கும் இடையே கன்னடத்தில் பேசுவதா? மராத்தியில் பேசுவதா? என்பதில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பேருந்தில் இருந்த மற்ற பயணிகளும் மராத்தியில் பேசுமாறு கூறி, … Read more

உக்ரைனிலிருந்து ரஷ்ய படைகளை திரும்பப்பெற வலியுறுத்தி ஐ.நா. தீர்மானம்: இந்தியா புறக்கணிப்பு

உக்ரைனிலிருந்து ரஷ்ய படைகளை திரும்பப்பெற வலியுறுத்தி ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா புறக்கணித்துள்ளது. 193 நாடுகள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் 93 நாடுகள் ஆதரவாகவும், 18 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்திய உள்பட 65 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. கடந்த முறை ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது 140-க்கு அதிகமான நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்த நிலையில் தற்போது வெறும் 93 நாடுகளே ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்துள்ளன. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் – … Read more

அம்பேத்கர் & பகத்சிங் புகைப்படம்! ஆம் ஆத்மி vs பாஜக இடையே கடும் வாரத்தை போர்

Delhi Assembly News In Tamil: டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அம்பேத்கர் மற்றும் பகத் சிங் புகைப்படங்கள் எனக் கேள்வி எழுப்பிய ஆம் ஆத்மி.. பதிலடி தந்த பாஜக.

பட்ஜெட்டில் வரப்போகும் முக்கிய மாற்றம் என்ன? இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்

Tamil Nadu Budget 2025 Latest News: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது. இதில் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள தமிழக பட்ஜெட் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.