ரியோ ஓபன் டென்னிஸ்; சாம்பியன் பட்டம் வென்றார் செபாஸ்டியன் பேஸ்

ரியோ டி ஜெனிரோ, பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்ட ரியோ ஓபன் டென்னிஸ் தொடர் பிரேசிலில் நடைபெற்றது. இதில் லீக், காலிறுதி, அரையிறுதி ஆட்டங்கள் முடிவில் பிரான்சின் அலெக்ஸாண்ட்ரே முல்லர் மற்றும் அர்ஜெண்டினாவின் செபாஸ்டியன் பேஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். அலெக்ஸாண்ட்ரே முல்லர் – செபாஸ்டியன் பேஸ் இடையிலான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் செபாஸ்டியன் பேஸ் ஆதிக்கம் செலுத்தினார். இறுதியில் 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் … Read more

இஸ்ரேலுடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தையை ரத்து செய்த ஹமாஸ்

காசா முனை, இஸ்ரேல், ஹமாஸ் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் தங்கள் பிடியில் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்து வருகிறது. அதற்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்து வருகிறது. அதேவேளை, தங்கள் பிடியில் உள்ள பணய கைதிகளில் கொல்லப்பட்ட 4 இஸ்ரேலியர்களின் உடலை கடந்த சில நாட்களுக்கு முன் ஹமாஸ் ஒப்படைத்தது. கொல்லப்பட்ட இஸ்ரேலியர்களின் உடல்கள் … Read more

Thangamayil: தங்கமயில் ஜுவல்லரியின் பிரத்யேக பிரைடல் ஸ்டோர்!

தங்கமயிலின் 60வது கிளை சென்னை தி.நகரில் (23.02.2025 ) ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. கிளையை நிர்வாக ஆடிட்டர் திரு. ராஜகோபாலன் அவர்கள் திறந்து வைத்தார். நிர்வாக இயக்குநர் திரு. பலராம கோவிந்த தாஸ், இணை நிர்வாக இயக்குநர்கள் திரு. Ba. ரமேஷ், திரு. NB.குமார், நிர்வாக நிதி அதிகாரி திரு. ராஜேஷ் கண்ணா, பொது மேலாளர்கள் திரு. அருண், திரு. கோகுல், திரு. கிஷோர் லால் ஆகியோர் கலந்து கொண்டனர். தங்கமயில் சென்னை தி.நகரில் தங்கமயிலின் 60வது புதிய … Read more

“தமிழக கிராம உள்ளாட்சி அமைப்புகளில் பிசி, எம்பிசி பிரிவினருக்கு 12.39% மட்டுமே பிரதிநிதித்துவமா?” – ராமதாஸ்

சென்னை: “கிராம உள்ளாட்சிகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைத்திருக்கும் பிரதிநிதித்துவம் எவ்வளவு என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒட்டுமொத்தமாகவே 12.39% மட்டும்தான் பிரதிநிதித்துவம் கிடைத்திருப்பதாக மத்திய அரசின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளில் பெரும்பாலானவை பிற பிற்படுத்தப்பட்ட … Read more

சட்டத்தை நீதித் துறையால் மாற்ற முடியாது: குடியரசு துணைத் தலைவர் தன்கர் கருத்து

புதுடெல்லி: அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் 75-வது ஆண்டை நினைவுகூரும் வகையில் ஓராண்டு சிறப்பு கொண்டாட்டம் கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்ய நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. நீதித் துறை உட்பட வேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது. சில விவகாரங்களில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் … Read more

இந்த வருடம் தக்ஷசிலா – The Rhythm of Life

கல்லூரி வாழ்க்கை என்பது வெறும் படிப்பா? இல்லவே இல்ல! கலாச்சார நிகழ்ச்சிகளும், competitions-களும் தான் நிறைய பேரோட தலையணை கனவுகளையும், திறமைகளையும் வெளிக்கொண்டு வர்றது. அதுக்குத்தான் CIT-யின் பிரமாண்டமான கலாச்சார திருவிழா தக்ஷசிலா! 2013-ல் சின்ன அளவில் தொடங்கிய இது, இப்போ 10,000+ பேரோட கலாச்சார திருவிழாவா வளர்ந்து, பெரிய தருணங்களுக்கே சாட்சியாய் நிற்கிறது! இசை என்பது வாழ்க்கையின் மூச்சு மாதிரி! நம்ம ஒவ்வொரு நிமிஷத்தையும் define பண்ணும் ரிதம்தான் இந்த முறை தக்ஷசிலா-வின் theme. ஒரு … Read more

சி எஸ் கே  உதவி பயிற்சியாளராக ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமனம்

சென்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது.10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் கடந்த நவம்பர் 24 மற்றும் 25-ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் … Read more

கும்ப மேளாவில் புனித நீராடிய தலைமை தேர்தல் கமிஷனர்

பிரயாக்ராஜ், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் தற்போது மகா கும்பமேளா நடந்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 13-ந்தேதி சாதுக்கள், துறவிகளின் பக்தி கோஷத்துடன் மகா கும்பமேளா நிகழ்ச்சிகள் தொடங்கின.கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் இடமான திரிவேணி சங்கமம் அமைந்துள்ள பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள சாதுக்கள், துறவிகள், ஆன்மிக பெரியவர்கள் மற்றும் உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் நாள்தோறும் பிரயாக்ராஜ் … Read more

சாம்பியன்ஸ் டிராபி: வங்காளதேசத்துக்கு எதிராக டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு

ராவல்பிண்டி, 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 … Read more

அமெரிக்காவில் இருந்து டெல்லி புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; இத்தாலியில் தரையிறக்கம்

ரோம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு நேற்று மாலை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 199 பயணிகள், 15 ஊழியர்கள் என மொத்தம் 214 பேர் பயணித்தனர். துர்க்மேனிஸ்தான் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால், இத்தாலிக்கு விமானம் திருப்பி விடப்பட்டது. இத்தாலி விமானப்படையின் போர் விமானங்கள் பாதுகாப்புடன் பயணிகள் விமானம் ரோம் நகரில் தரையிறக்கப்பட்டது. இதையடுத்து, விமானத்தில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் விமானத்தில் வெடிகுண்டு … Read more