சென்னை : பெண்கள் நமக்காக தியாகம் செய்ய பிறக்கவில்லை; ஆணாதிக்க மனோபாவம் மறைய வேண்டும் என்றும், பெண்கள் கடமை செய்ய மட்டுமல்ல உரிமை பெறவும் பிறந்தவர்கள். வீரமும் விவேகமும் பெண்களின் அடையாளமாகட்டும் என சென்னையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். இல்லத்தை மட்டுமின்றி, உலகத்தையும் இயங்கச் செய்யும் ஆற்றல்மிக்கவர்கள் மகளிர் என தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெறும் மகளிர் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். நாளும் கிழமையும் நலிந்தோருக்கு இல்லை; […]
