சந்தோஷ மழையில் Jio வாடிக்கையாளர்கள்.. IPL Lovers-க்கு சூப்பர் ஆப்பர்

Jio Cricket Offer 2025 JioHotstar Free: ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் தற்போது ஐபிஎல் 2025 (IPL 2025) போட்டிக்கு முழுமையாக ரெடியாகிவிட்டனர். அதன்படி இந்த ஆண்டு 2025 ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 முதல் தொடங்கி, மே மாதம் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சுமார் இரண்டு மாதங்கள் நடைபெற உள்ள இந்த ஐபிஎல் தொடரை காண, தற்போது ஜியோ ஆட்டகாசமான ஆபரை வாரி அளித்துள்ளது.

இந்நிலையில் ஜியோ சிம் பயன்படுத்துபர்களுக்கு ரூபாய் 299 அல்லது அதற்கு மேற்பட்ட ரீசார்ஜ் திட்டத்தில் சிறப்பான பலனை அள்ளி வழங்கி உள்ளது. இவர்கள் கிரிக்கெட் சீசனின் முழு பலனை இப்போது இலவசமாக அனுபவிக்க முடியும். இந்தச் சலுகையின் கீழ் ஜியோ பல சிறந்த மற்றும் அற்புதமான வசதிகளை வாரி வழங்கியுள்ளது, இதன் மூலம் நீங்கள் அவ்வித இடையூறும் இல்லாமல் உயர் தரத்தில் கிரிக்கெட் போட்டிகளை காணலாம்.

ரீசார்ஜ் திட்டத்திந முழு விவரம்:

90 நாட்களுக்கு இலவச ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) அணுகல்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை டிவி அல்லது மொபைலில் 4K தரத்தில் முற்றிலும் இலவசமாக காணலாம். இந்த சலுகை ரூபாய் 299 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டத்தில் பெறலாம். இந்த ஆப்பர் அனைத்து ஜியோ பயனர்களுக்கும் பொருந்தும்.

 

50 நாட்களுக்கு இலவச JioFiber / JioAirFiber ட்ரையல்: நீங்கள் வீட்டிலேயே அதிவேக இணையம், 4K தரத்தில் கிரிக்கெட் போட்டியை காண Jio தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு JioFiber / JioAirFiber இன் 50 நாட்கள் இலவச ட்ரையல் பேக்கை வழங்குகிறது. இந்த ட்ரையல் போக்கின் ஒரு பகுதியாக, நீங்கள்:

– 800+ டிவி சேனல்கள்
– 11+ OTT பயன்பாடுகளுக்கான அணுகல்
– அன்லிமிடெட் வைஃபை

இந்த அறிவிப்பின் மூலம் தற்போது ஐபிஎல் தொடரைப் பார்க்க திட்டமிட்டு வரும் கிரிக்கெட் ரசிகர்களும் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த அற்புதமான சலுகையைப் பெற நீங்கள் விரும்பினால், மார்ச் 17, 2025 முதல் மார்ச் 31, 2025 வரை பின்வரும் படிகளை சரியாக பின்பற்றவும்:

இந்த அற்புதமான சலுகையைப் பெற விரும்பினால், மார்ச் 17, 2025 முதல் மார்ச் 31, 2025 வரை பின்வரும் படிகளைப் பின்பற்றவும்:

– ஜியோ சிம் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள்: ரூபாய் 299 திட்டத்துடன் ரீசார்ஜ் (1.5GB/நாள் அல்லது அதற்கு மேல்) செய்தால் போதும்.
– புதிய ஜியோ சிம் உள்ள பயனர்கள்: புதிய ஜியோ சிம் வாங்கி ரூபாய் 299 மதிப்புள்ள திட்டத்தை பெற்றுக்கொள்ளலாம் (1.5GB/நாள் அல்லது அதற்கு மேல்).
மேலும் விவரங்களுக்கு: 60008-60008 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து சலுகையின் முழு விவரததை பெற்றுக் கொள்ளலாம்.

பிற நிபந்தனைகள்:

நீங்கள் மார்ச் 17, 2025 க்கு முன்பு ரீசார்ஜ் செய்திருந்தால், வெறும் ரூபாய் 100 மதிப்புள்ள ஆட்-ஆன் பேக் மூலம் இந்த சலுகையைப் பெற்றுக் கொள்ளலாம். ஜியோ ஹாட்ஸ்டார் பேக் மார்ச் 22, 2025 முதல் (கிரிக்கெட் சீசனின் தொடக்கப் போட்டியின் நாள்) செயல்படுத்தப்படும் மற்றும் 90 நாட்களுக்கு வேலிடிட்டி ஆகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.