சென்னை: திமுக அரசின் டாஸ்மாக் ரூ.1000 கோடி ஊழலுக்கு எதிரான பாஜக போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த மாநில பாஜக தலைவர் அண்ணாமலையை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் கீழ் செயல்பட்டு வரும் துறையான டாஸ்மாக் மதுபான விற்பனை மற்றும் கொள்முதலில் பெரும் ஊழல் நடைபெறுவதாக குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வந்தன. இதுதொடர்பான புகாரின் பேரில் அமலாக்கத்துறையினர், தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்பட டாஸ்மாக் மதுபான சப்ளை டிஸ்டில்லரி நிறுவனங்களான எஸ்என்ஜே., கல்ஸ், […]
