பெண்கள் பெயரில் சொத்து பதிவுக்கு 1% கட்டண குறைப்பு: நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது

பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் 1 சதவீத பதிவு கட்டணம் குறைப்பு என்ற தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக வணிக வரி, பதிவுத் துறை செயலர் குமார் ஜெயந்த் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: ‘சமூகத்தில் மட்டுமின்றி, அவரவர் குடும்பங்களிலும் பெண்களுக்கான சமபங்கை உறுதி செய்யும் வகையில் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ரூ.10 லட்சம் வரையிலான மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையா … Read more

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் என்கவுன்ட்டர்: உயிரிழந்த போலீஸாரின் எண்ணிக்கை 4-ஆக உயர்வு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த என்கவுன்ட்டரில் உயிரிழந்த போலீஸாரின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து கதுவா பகுதியில் தீவிரவாதிகளைத் தேடும் போலீஸாரின் நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ளது. ஜம்மு – காஷ்மீரின் கதுவா மாவட்டம் ராஜ்பாக் பகுதியில் ஜக்கோலே கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக காவல்துறைக்கு 2 நாட்களுக்கு முன்பு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் போலீஸார், ராணுவத்தினர், மத்திய ரிசர்வ் போலீஸார் அடங்கிய சிறப்பு ஆபரேஷன் குழுவினர் என 4 பிரிவினரும் அப்பகுதிக்கு விரைந்தனர். இதைத் … Read more

அமெரிக்க பெண் ரூ.1000-க்கு வாங்கிய ஓவியம் கோடிக்கணக்கில் ஏலம் போக வாய்ப்பு

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் ரூ.1000-க்கு வாங்கிய ஓவியம், பிரெஞ்சு ஓவியர் ரெனோயர் வரைந்த ஓவியமாக இருந்தால் அது ரூ.8.5 வரை ஏலம் போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியைச் சேர்ந்தவர் ஹேதி மா்க்கோ. இவர் பழங்கால பொருட்களை விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவர் அமெரிக்காவின் மான்ட்கோமெரி மாகாணத்தில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஏலம் ஒன்றை பார்வையிடச் சென்றனர். அப்போது பழைய பேப்பரில் வரையப்பட்ட ஓவியம் ஒன்று அவர் பார்த்தார். அது அரிய … Read more

ஏடிஎம் சேவை கட்டண உயர்வால் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஏடிஎம் சேவை கட்டண உயர்வால் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏடிஎம் மையங்களில் கார்டுகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனை சேவைகளுக்கான கட்டணங்களை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி அல்லாமல் மற்ற வங்கிகளின் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான கட்டணம் ரூ.17-ல் இருந்து ரூ.19 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல, வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏடிஎம்மில் மாதம்தோறும் 5 முறை இலவச பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். … Read more

ஒவ்வொரு மழை துளியையும் சேமிக்க வேண்டும்: ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அழைப்பு

ஒவ்வொரு மழை துளியையும் சேமியுங்கள் என்று மனதின் குரலில் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையான நேற்று 120-வது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி ஒலிபரப்பானது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பொதுத் தேர்வு, ஆண்டு இறுதித் தேர்வுகள் நிறைவடைந்து கோடை விடுமுறை காலம் தொடங்க இருக்கிறது. இந்த கோடை விடுமுறை நாட்களில் ஏதாவது ஆக்கப்பூர்வமானதை செய்ய வேண்டும். நம்முடைய திறன்களை மேலும் கூர்மைப்படுத்த வேண்டும். குறிப்பாக உங்கள் பகுதிகளில் நடைபெறும் … Read more

10-வது குழந்தைக்கு தாயானார் 66 வயது ஜெர்மனி பெண்

ஜெர்மனியைச் சேர்ந்த பெண் தனது 66-வது வயதில் 10-வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். ஜெர்மனியின் பெர்லின் நகரைச் சேர்ந்த அலெக்சான்ட்ரா ஹில்டெப்ரான்ட் (66) பெர்லின் சுவர் அருங்காட்சியகத்தை நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 1970-களில் முதல் குழந்தை பிறந்தது. அதன் பிறகு அடுத்தடுத்து 8 குழந்தைகளை பெற்றார். 50 வயதை கடந்த பிறகும் குழந்தைகளை பெற்று வந்தார். அனைத்து குழந்தைகளும் அறுவை சிகிச்சை மூலமே பிறந்தன. இதில் முதல் குழந்தையான ஸ்வெட்லானாவுக்கு 46 வயதாகி விட்டது. 9-வது குழந்தையான … Read more

அதிமுகவுடன் கூட்டணி; எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை: அண்ணாமலை உறுதி

என்னால் யாருக்கும் பிரச்சினை வராது, மாற்றி, மாற்றி பேசுபவன் நான் அல்ல. எனக்கு தமிழகம் முதன்மையானது. பாஜக வளர்ச்சி முக்கியம். என, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ‘யுகாதி’ பண்டிகை நல்வாழ்த்துக்கள். சென்னை – ராமேஸ்வரம் இடையே தற்போது இரண்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மூன்றாவது ரயில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை இணைக்கிறது. மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. கோவையில் இருந்து ராமநாதபுரம், … Read more

சக மாணவர் மீது தாக்குதல்: ரூர்க்கி ஐஐடி மாணவர்கள் 5 பேர் மீது வழக்கு பதிவு

டேராடூன்: சக மாணவர் ஒருவரை கண்ணாடி பாட்டில்களால் தாக்கியதாக ஐஐடி ரூர்க்கியைச் சேர்ந்த 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உத்தராகண்ட் மாநிலம் ரூர்க்கியிலுள்ள ஐஐடி-யில் படித்து வருபவர் அஜித்குமார் கேஷ்ரி(23). இவர் ஜார்க்கண்டை சேர்ந்தவர். இந்நிலையில் கடந்த 23-ம் தேதி அஜித் குமாரை, அதே ஐஐடி-யில் படிக்கும் 5 பேர் சேர்ந்து கண்ணாடி பாட்டிலால் தாக்கியுள்ளனர். முன்பகை காரணமாக இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதுதொடர்பாக அஜித்குமார் கொடுத்த புகாரின் பேரில் 5 மாணவர்கள் … Read more