இந்தியர்களை சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் கொண்டு செல்லும் ‘ஆள்கடத்தல்’ மையமான குஜராத்

இந்தியாவிலிருந்து கனடா வழியாக அமெரிக்காவிற்கு சட்டவிரோத குடியேற்றம் அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஆண்டு அமெரிக்க எல்லையில் 14,000க்கும் மேற்பட்ட இந்திய குடியேறிகள் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்க மதிப்பீடுகளின்படி, 725,000க்கும் மேற்பட்ட ஆவணமற்ற இந்தியர்கள் அமெரிக்காவில் வசிக்கின்றனர். அமெரிக்காவுக்குள் இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறுவது குறித்த விசாரணையில், இந்தியாவில் இருந்து மனித கடத்தல் செய்யும் இந்த வலையமைப்பில் ஆயிரக்கணக்கான முகவர்கள் செயல்படுவதாகத் தெரியவந்துள்ளது. இந்தியாவில் சுமார் 4,000 முதல் 4,500 கடத்தல் முகவர்கள் உள்ளதாகவும் அதில் சுமார் 2000 பேர் … Read more

Doctor Vikatan: அதிக குளிரில் ஏசி, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உந்துதல், ஏதாவது பாதிப்பு வருமா?

Doctor Vikatan: ஏசி எந்த அளவில் இருப்பது சரியானது… சிலருக்கு அதிகமாக ஏசி தேவைப்படுவதாகச் சொல்கிறார்கள், என்ன உண்மை… ஓயாமல் ஏசி பயன்படுத்தினால் என்னென்ன பாதிப்புகள் வரும்… குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஏசி இருந்தால் என்னென்ன பாதிப்புகள் வரும்… குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஏசி இருக்கும்போது அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியுள்ளது, அதன் காரணமாக ஏதாவது பாதிப்புகள் வருமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த இ.என்.டி மருத்துவர் பி.நட்ராஜ் மருத்துவர் பி.நட்ராஜ் ஏசியை எப்போதும் மிதமான டெம்பரேச்சரில் வைத்திருப்பதுதான் … Read more

போக்​கு​வரத்து ஓய்​வூ​தி​யர்​களுக்கு பணப்​பலன் வழங்க ரூ.265 கோடி ஒதுக்​கீடு

சென்னை: போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.265 கோடியை குறுகிய காலக் கடனாக போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து செயலர் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது: கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஓய்வு, விருப்பு ஓய்வு, உயிரிழந்த தொழிலாளர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.265.44 கோடி ஒதுக்கீடு செய்யுமாறு போக்குவரத்துத் துறை தலைவர் அலுவலகம் சார்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதை பரிசீலித்த அரசு, ஓய்வூதியர்களுக்கு பணப்பலன்களை வழங்கும் … Read more

பெங்களூரு விமான நிலையத்தில் தங்கம் க‌டத்தியதாக நடிகை ரன்யா ராவ் கைது: சிக்கியது எப்படி?

துபாயில் இருந்து 14.8 கிலோ தங்க நகைகளை கடத்தி வந்த‌தாக நடிகை ரன்யா ராவ் பெங்களூரு சர்வதேச‌ விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்த ரன்யா ராவ் (32) கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‛வாகா’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ந‌டித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு ரன்யா ராவ் துபாயில் இருந்து பெங்களூருக்கு எமிரேட்ஸ் விமானத்தில் வந்தார். அவர் … Read more

ஹமாஸ் அமைப்புக்கு இந்தியா தடை விதிக்க வேண்டும்: இஸ்ரேல் அரசு வலியுறுத்தல்

புதுடெல்லி: ஹமாஸ் அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என இந்தியாவிடம் இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது. தீவிரவாதத்திலிருந்து தன்னை பாதுகாத்து கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது என இந்தியா கூறுகிறது. அதே நேரத்தில் பாலஸ்தீனத்தின் தனி நாடு கோரிக்கைக்கு இந்தியா ஆதரவாக உள்ளது. ஐ.நாவில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக சேர்க்கவும் இந்தியா ஆதரவு தெரிவித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியபோது, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் … Read more

உலகிலேயே எந்த கேப்டனும் செய்யாத சாதனை.. வரலாறு படைத்த ரோகித் சர்மா!

Rohit Sharma Creates World Record: சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இத்தொடரின் அரை இறுதி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில், முதல் அரை இறுதி போட்டி நேற்று (மார்ச் 04) நடைபெற்றது. அதில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின.  டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 264 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதையடுத்து … Read more

தமிழ்நாடு புதுச்சேரியில் இன்று தொடங்குகிறது பிளஸ்1 பொதுத்தேர்வு!

சென்னை:  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏற்கனவே பிளஸ்2 தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பிளஸ்1  பொதுத்தேர்வு இன்று தொடங்கு கிறது. தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.  இதற்கான தேதிகள் கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்ட நிலையில்,  அதன்படி, நடப்பாண்டுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 3 தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு இன்று … Read more

வேலூர்: “NSG கமாண்டோக்கள் ஒத்திகை பயிற்சி… தவறாக பகிரக் கூடாது'' – எச்சரிக்கும் காவல்துறை

வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக வளாகத்துக்குள் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று துப்பாக்கி ஆயுதங்களை ஏந்திக்கொண்டு காரில் உள்ளே சென்று… திடீர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்துவதைப் போன்ற தவறான தகவல்களை சிலர் பதிவிட்டு, இரண்டொரு வீடியோக்களையும் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றம் செய்திருக்கின்றனர். இந்த வீடியோக்கள் தொடர்பான உண்மைத்தன்மை அறியாமல், பலரும் பலவாறாக கேள்விகளையெழுப்பி பகிர்ந்து வருகின்றனர். உண்மையில் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது, `பயங்கரவாத தடுப்பு கூட்டு ஒத்திகை’ பயிற்சி தான். பயங்கரவாத தடுப்பு கூட்டு ஒத்திகை பயிற்சி … Read more

மார்ச் 7-ம் தேதி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி: தக்கோலத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைக்கிறார்

சென்னை: மத்திய தொழில் பாதுகாப்பு படை தினத்தையொட்டி, கடல் வளத்தை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைக்கிறார் என தென்மண்டல தலைமையக ஐ.ஜி. எஸ்.ஆர்.சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) உருவாக்கப்பட்டு 56 ஆண்டுகள் ஆவதை ஒட்டி, வரும் 7-ம் தேதி ‘சிஐஎஸ்எஃப் தினம்’ கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அன்றைய தினம், ராணிப்பேட்டை மாவட்டம், … Read more

அயோத்தி ராமர் கோயிலை குண்டு வீசி தகர்க்க பாகிஸ்தான் ஐஎஸ்ஐ சதி செய்தது அம்பலம்: உ.பி இளைஞர் கைது

அயோத்தி ராமர் கோயிலை குண்டு வீசி தகர்க்க பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ செய்த சதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உ.பி. இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 2 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் புதிதாக கட்டப்பட்டு கடந்தாண்டு ஜனவரியில் திறக்கப்பட்டது. அப்போது முதல் அங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதும் இருந்து வந்து செல்கின்றனர். இங்கு 1529-ம் ஆண்டு முகலாயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டிருந்த பாபர் … Read more