திமுகவின் இந்தி எதிர்ப்பில் ராகுல், அகிலேஷ் நிலைப்பாடு என்ன? – ராஷ்ட்ரிய லோக் தளம்

புதுடெல்லி: திமுகவின் இந்தி எதிர்ப்பு விவகாரத்தில் அதன் கூட்டணிக் கட்சிகளின் நிலை என்ன என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டுமென பாஜக தலைமையிலான மத்திய ஆட்சியில் இடம்பெற்றுள்ள ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அணில் துபே வலியுறுத்தி உள்ளார். இது குறித்து உ.பி.,யின் ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அனில் துபே கூறியதாவது: இண்டியா கூட்டணியின் முக்கிய அங்கமான சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரஸ், திமுகவின் புதிய கல்விக் கொள்கை … Read more

தனக்கு நியாயம் கிடைக்கவில்லை என கூறும் நடிகையின் புதிய வீடியோ

சென்னை நடிகை விஜயலட்சுமி – சீமான் விவகாரத்தில் தனக்கு நீயாயம் கிடைக்கவில்லை என புதிய வீடியோவில் அறிவித்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்துக்கொள்வதாக கூறி, பாலுறவு வைத்து ஏமாற்றியதாக வளசரவாக்கம் போலீசில் நடிகை விஜயலட்சுமி புகார் செய்ததன் அடிப்படையில் சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார். சென்னை உயர்நீதிமன்றம் சீமான் தாக்கல் செய்திருந்த … Read more

6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள்: மத்திய மந்திரியிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை

புதுடெல்லி, தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு மருத்துவத்துறை தொடர்பான கோரிக்கைகளை இன்று (4.3.2025) புதுடெல்லியில், மத்திய சுகாதாரத் துறை மந்திரி ஜே.பி.நட்டாவிடம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். அதன் முக்கிய விபரங்கள் பின்வருமாறு:- 1. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையால் நிறைவேற்றப்பட்டு. கவர்னர் ஒப்புதலுடன் மத்திய அரசக்கு அனுப்பப்பட்டுள்ள நீட் நடைமுறைக்கு எதிரான சட்ட முன்வடிவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்றுத்தரக் கோருதல். 2. கோயம்புத்தூரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க அனுமதி கோருதல். … Read more

சாம்பியன்ஸ் டிராபி அரைஇறுதி: கண்டிப்பாக அவர் அணியில் இடம்பெற வேண்டும் – இந்திய முன்னாள் வீரர்

மும்பை, 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடந்து வருகிறது. மற்ற லீக் ஆட்டங்கள் பாகிஸ்தானில் உள்ள லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் நடைபெற்றது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியா, நியூசிலாந்து, ‘பி’ பிரிவில் தென் ஆப்பிரிக்கா, … Read more

ரத்ததானம் செய்து 24 லட்சம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ஜேம்ஸ் ஹாரிசன் காலமானார்

சிட்னி, ரத்த தானத்தின் மூலம் சுமார் 24 லட்சம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ‘தங்கக் கை மனிதர்’ (Man with the golden arm) என அறியப்பட்ட ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜேம்ஸ் ஹாரிசன் (88) காலமானார். தனது 18 வயதில் இருந்து 81 வயது வரை 1,173 முறை இவர் ரத்த தானம் செய்துள்ளார். ஜேம்சின் பிளாஸ்மாவில் Anti-D எனப்படும் அரியவகை ஆன்டிபாடி இருந்துள்ளது. இது பிரசவத்தின்போது தாயிடம் இருந்து குழந்தைகளுக்கு பரவும் தீங்கு விளைவிக்கும் ஆன்டிபாடிகளை … Read more

Condom: `வடக்கில் வெற்றிலை, தெற்கில் மல்லி ஃப்ளேவர்'- இந்தியாவில் ஆணுறை விற்பனை குறித்து Manforce MD

நாட்டின் மிகப்பெரிய மருத்துவ நிறுவனமான மேன்கைண்ட் பார்மா (Mankind Pharma)-வின் கிளை நிறுவனம் மேன் ஃபோர்ஸ் டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. பாலியல் குறித்து வெளிப்படையாக பேசுவதற்கு வெட்கப்படும் இந்தியாவில், சிறப்பாக ஆணுறை விற்பனை செய்துவரும் வெற்றிகரமான நிறுவனமாக கருதிக்கொள்ளும் மேன்கைண்ட் பார்மாவின் இணை நிறுவனர் ராஜீவ் ஜுனேஜா, ஆணுறைகளில் அதிகம் விற்பனையாகும் ஃப்ளேவர் குறித்துப் பேசியுள்ளார். தெற்கில் இருப்பவர்களுக்கு Flower Flavor Condom பிடிக்கும்! இந்தியாவின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் வசிக்கும் நபர்கள், ஒவ்வொரு விதமான ஃப்ளேவரை … Read more

அன்னதானத்தை தடுத்ததால் அய்யாவழி பக்தர்கள் சாலை மறியல்: நெல்லை காவல் துறை கூறுவது என்ன?

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அய்யா வைகுண்டர் அவதார தினவிழாவின் போது அன்னதானம் வழங்குவதற்கு சமையல் செய்வதை காவல் துறை தடுத்ததைக் கண்டித்து அய்யாவழி பக்தர்கள் சப்பரங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தியபோது போலீஸாருககும், அய்யாவழி பக்தர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது குறித்து காவல் துறை விளக்கம் அளித்துள்ளது. பாளையங்கோட்டை கோட்டூர் சாலையில் சொக்கலிங்க சுவாமி கோயில் மற்றும் அய்யா வைகுண்டர் திருக்கோயில் ஒருசேர அமைந்துள்ளன. இந்த கோயில்களில் … Read more

இறக்குமதியை குறைக்க பருப்பு உற்பத்திக்கு முக்கியத்துவம்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: பருப்பு உற்பத்​தியை ஊக்கு​வித்து இறக்​கும​தியை குறைக்க வேண்​டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார். வேளாண்மை மற்றும் ஊரக வளம் பற்றிய பட்ஜெட்டுக்கு பிந்தைய காணொலிவழி கருத்​தரங்கு நேற்று முன்​தினம் நடைபெற்​றது. துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்ற இதில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: வேளாண்மை துறையை மேம்​படுத்​துதல் மற்றும் கிராமங்களை வளம் பெறச் செய்தல் ஆகிய 2 பெரிய இலக்​குகளை எட்டு​வதற்காக மத்திய அரசு பாடு​பட்டு வருகிறது. எனவே, மத்திய பட்ஜெட்​டில் வேளாண்மை … Read more

Nasser: தந்தையின் கனவு; நடிப்பின் மீதான தீராக் காதல்; தமிழ்த் திரையுலக மாயனின் கதை

படிப்பில் கோட்டைவிட்ட எளிய குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன். தன் குடும்பத்தைப் பொருளாதார ரீதியாக வலுப்படுத்திக்கொள்ள நினைக்கிறார். விமானத்துறையில் இன்டர்ன் ஆக ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வேலையை நிரந்தரமாக்கி வாழ்வில் முன்னேறிவிட முடிவெடுக்கிறார். அப்போது, அவன் தந்தையின் ஆசைக்காக அந்த வேலையைக் கைவிட்டு நடிப்புப் பயிற்சிக்காக கல்லூரியில் சேர்கிறார். ஒல்லியான தேகம், நீண்ட மூக்கு, பெரிய நெற்றி என தன் மீதான தாழ்வுணர்ச்சி அவருக்கு அதிகமிருந்தது. நடிகன் என்பவன் திடகாத்திரமான உடல், பொலிவான முகம் கொண்டிருக்கவேண்டுமென அப்போது … Read more

முதல்வர் மு க ஸ்டாலின் நந்தலாலா மறைவுக்கு இரங்கல்’

சென்னை நந்த்லாலா மறைவுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார் தமிழக்  முதல்வர் மு  க ஸ்டாலின் எக்ஸ் வலைத்தளத்தில், தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர் சங்கத்தின் துணைத் தலைவரும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினருமான கவிஞர் நந்தலாலா அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். தமிழ்நாட்டின் புத்தகத் திருவிழாக்கள், முற்போக்கு மேடைகள், தொலைக்காட்சி விவாதங்கள், பட்டிமன்றங்கள் என கவிஞர் நந்தலாலா அவர்களின் குரல் ஒலிக்காத மேடையே இல்லை எனும் … Read more