‘மகளிர் உரிமைத் தொகையால் ஓய்வூதியத்தை மறுக்கக் கூடாது’ – ஏஐடியுசி ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்

கோவை: “மகளிர் உரிமைத் தொகை பெறுவதால் உடல் உழைப்பு தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு ஓய்வூதியம் மறுக்கக் கூடாது” என ஏஐடியுசி ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசும், தொழிலாளர் துறையும் தலையிட்டு நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு ‘ஏஐடியுசி’ உடல் உழைப்பு தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு இன்று (மார்ச் 4) ஆர்ப்பாட்டம் நடந்த தமிழ்நாடு ‘ஏஐடியுசி’ மாநில செயலாளர் … Read more

ஆர்.ஜி.கர் பாலியல் வன்கொடுமை வழக்கு: கொல்கத்தா போலீஸாரிடம் சிபிஐ விசாரணை

ஆர்.ஜி.கர் மருத்துவமனை பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஆதாரங்களை அழித்தது தொடர்பான வழக்கில் கொல்கத்தா போலீஸாரிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தன்னார்வலர் சஞ்சய் ராய்க்கு கொல்கத்தா அமர்வு நீதிமன்றம் கடந்த ஜனவரி 20-ம் தேதி ஆயுள் தண்டனை … Read more

‘இது உளவியல், அரசியல் அடி…’ – ஆயுத உதவிகளை நிறுத்திய அமெரிக்கா மீதான உக்ரைன் பார்வை

கீவ்: ‘உக்ரைனுக்கான அனைத்து உதவிகளையும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிறுத்தியிருப்பது, எங்களை ரஷ்யாவின் நிபந்தனைகளை ஏற்க வைக்க அவர் முயற்சிப்பதாகவே தோன்றுகிறது’ என்று உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து உக்ரைனின் நாடாளுமன்ற வெளியுறவு விவகாரக் குழு தலைவர் ஒலெக்சாண்டர் மெரேஷ்கோ கூறுகையில், “இப்போது உதவிகளை நிறுத்துவது என்பது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு உதவுவதேயாகும். மேலோட்டமாக பார்த்தாலே இது மோசமானது. அவர் எங்களைச் சரணடைவதை நோக்கித் தள்ளுவது போலத் தோன்றுகிறது. அதாவது … Read more

IND vs AUS | பேட்டிங் செய்யாமலேயே வரலாறு படைத்த விராட்! ராகுல் டிராவிட்டின் சாதனை முறியடித்தார்

Virat Kohli Created History: விராட் கோலி அதிக கேட்சுகள்: விராட் கோலி துபாய் மைதானத்தில் பேட்டிங் செய்யாமலேயே வரலாறு படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக கேட்சுகளை பிடித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். அவர் ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்துள்ளார்.  சாம்பியன்ஸ் டிராபியின் முதல் அரையிறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் ஜோஷ் இங்கிலிஸின் கேட்சை பிடித்த பிறகு விராட் இந்த … Read more

24 லட்சம் குழந்தைகள் உயிரைக் காத்த ‘தங்கக் கை மனிதர்’ மரணம்

சிட்னி ரத்ததானம்  செய்து 24 லட்சம் குழந்தைகள் உயிரை காத்த ஸ்ரிசன் மரணம் அடைந்துள்ளார். தனது ரத்த தானத்தின் மூலம் சுமார் 24 லட்சம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ‘தங்கக் கை மனிதர்’ (Man with the golden arm) என அறியப்பட்ட ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜேம்ஸ் ஹாரிசன் (88) காலமானார். இவர் தனது 18 வயதில் இருந்து 81 வயது வரை 1,173 முறை இவர் ரத்த தானம் செய்துள்ளார். இவரது பிளாஸ்மாவில் இருந்த Anti-D … Read more

போதைப் பழக்கத்தால் சிதைந்த மூக்கு; எக்கச்சக்க அறுவை சிகிச்சைகள்… சிகாகோ பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம்

போதை அழிவின் பாதை என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. போதைப்பழக்கம் ஒரு தனிநபரை மட்டுமல்ல அவரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அவரைச் சார்ந்த அனைவருக்குமே பாதிப்பு ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. போதைப்பொருள் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல மன ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கும். சம்பந்தப்பட்டவர்களை மீள முடியாத துயரத்தில் ஆழ்த்திவிடும். கெல்லி, போதைப்பழக்கத்திறகு முன்னால் இதற்கு உதாரணம் சிகாகோவைச் சேர்ந்த 38 வயதான கெல்லி கொய்ரா (Kelly kozyra) என்ற பெண். 2017-ம் … Read more

சிஐஎஸ்எஃப் தினம்: சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைக்கிறார் அமித் ஷா

சென்னை: “மத்திய தொழில் பாதுகாப்பு படை தினத்தை முன்னிட்டு, கடல் வளத்தை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் சைக்கிள் பேரணியை மத்திய உள்துறை அமைச்சர் தொடங்கி வைக்கிறார். இதில், பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும்” என தென்மண்டல தலைமையக ஐ.ஜி. எஸ்.ஆர்.சரவணன் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து, மத்திய தொழில்பாதுகாப்பு படை தென்மண்டல தலைமையக ஐ.ஜி. எஸ்.ஆர்.சரவணன் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) உருவாக்கப்பட்டு 56 ஆண்டுகள் … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயில் மீது விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படுமா?

திருப்பதி ஏழுமலையான் கோயில் மீது விமானங்கள் பறக்க தடை விதிப்பது குறித்து கலந்துபேசி முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு கூறியுள்ளார். உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் சுமார் 70 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். தேவஸ்தான ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். திருமலையில் 24 மணி நேரமும் பக்தர்களின் கூட்டம் இருப்பதுடன் கோயிலுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தலும் இருப்பதால் வருடத்தின் 365 நாட்களும் தீவிர கண்காணிப்பில் இக்கோயில் உள்ளது. குடியரசுத் … Read more

வன்தாரா வனவிலங்கு மீட்பு, மறுவாழ்வு பாதுகாப்பு மையத்தை திறந்து வைத்து பார்வையிட்ட பிரதமர் மோடி

PM Narendra Modi News In Tamil: குஜராத்தில் வனவிலங்கு மீட்பு, மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு மையமான வன்தாரா பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துப் பார்வையிட்டார். 

யுவன் சங்கர் ராஜா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா! பிரபலங்கள் பங்கேற்பு..

Sweet Heart Movie Trailer Released : யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது.