பிடிஆர் எழுப்பிய அதிரடி கேள்விகள்..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்த வீடியோ

PTR Palanivel Thiagarajan | மும்மொழிக் கொள்கை குறித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சரமாரியாக கேள்வி எழுப்பிய வீடியோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.

IND vs AUS: குல்தீப் யாதவை ஒரே நேரத்தில்… கடுமையாக திட்டிய ரோஹித், விராட் – ஏன்?

India Vs Australia Semi Final Live: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றன. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை விளையாடப்படாத ஆடுகளத்தில் போட்டி நடைபெறுகிறது. India Vs Australia: அதிரடி காட்டிய டிராவிஸ் ஹெட் இந்திய அணி எவ்வித மாற்றத்தையும் செய்யாத நிலையில், ஆஸ்திரேலிய அணி அதன் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்களை செய்தது. மேட் ஷார்ட் காயத்தால் விலகியதால் கூப்பர் … Read more

கார் ரேசில் புதிய சாதனை புரிந்த அஜித் குமார்

ஸ்பெயின் கார் ரேசில் புதிய சாதனை புரிந்து தனது முந்தைய சாதனையை நடிகர் அஜித் குமார் முறியடித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் கார் பந்தயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த மாதம் துபாயில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் அவருடைய அணி பங்கேற்றது. பந்தயத்துக்கு முன்பாக நடந்த பயிற்சியில் அஜித்குமார் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது. இதையடுத்து போட்டியில் இருந்து அவர் விலகினாலும் அவருடைய அணி பங்கேற்று 3-ம் இடத்தை தட்டிச் சென்றது. … Read more

Sani Peyarchi 2025 | மேஷம் – கும்பம் – மீனம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன் | Dr.பஞ்சநாதன்

திருக்கணிதப் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சனிப்பெயர்ச்சி 2025, மார்ச் 29 – ம் தேதி நடைபெற இருக்கிறது. கும்ப ராசியில் இருந்து சனி பகவான் மீன ராசியில் அடி எடுத்துவைக்கிறார். இந்த மாற்றம் மேஷம், கும்பம், மீனம் ராசிகளுக்கு எப்படிப்பட பலன்களைக் கொடுக்கும் என்பதைக் காண்போம். Source link

அரசு விடுதி மாணவர்கள் நிதியில் மோசடி: சிபிசிஐடி விசாரணை கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை: சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிட விடுதி மாணவர்களுக்கு எண்ணெய், சோப்பு வாங்க வழங்கப்பட்ட நிதியில் மோசடி நடைபெற்ற வழக்கை சிபிசிஐடி விசாரிக்கக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த ராமன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “ஆதிதிராவிட நலத்துறையின் விடுதிகளில் தங்கிப் பயிலும் 6 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.100, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.150 வழங்கப்படுகிறது. இந்தத் தொகை அந்த மாணவர்களுக்கு … Read more

டெல்லி பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித் தொகை திட்டம்: சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 முதல் பதிவு தொடக்கம்

டெல்லி பெண்களுக்கு மாதம் 2,500 உதவித் தொகை வழங்கும் திட்டத்துக்கான பதிவு சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி சட்டப்பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலின்போது பாஜக சார்பில் வெளியிடப்பட்ட வாக்குறுதிகளில் மிக முக்கியமானது மகளிருக்கு மாதம் ரூ.2,500 உதவித் தொகை வழங்கும் திட்டம். தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைக்கும்பட்சத்தில் மகிளா சம்ருதி யோஜனா திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு இந்த உதவித் தொகை அளிக்கப்படும் என … Read more

பிக் பாஸ் 8: வெளியில் வந்தும் சண்டை போடும் முத்துக்குமரன்-செளந்தர்யா! என்ன பிரச்சனை?

Bigg Boss 8 Muthukumaran And Soundariya Fight : சில வாரங்களுக்கு முன்பு, பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நடந்தது. இதில் முத்துக்குமரன் டைட்டில் வின்னர் ஆனார்.  

பாஜக உடன் அதிமுக கூட்டணி… இபிஎஸ் அளித்த ஆச்சர்ய பதில் – 2026 தேர்தலில் காத்திருக்கு சர்ப்ரைஸ்!

Edappadi Palanisamy News: எங்களுக்கு ஒரே எதிரி திமுக தான் என்றும் வேறு எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி இல்ல என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார்.

சாலையில் பிறந்த நாள் கொண்டாடிய பாஜக மேயர் மகன்.கைது

ராய்ப்பூர் நடுச்சாலையில் பிறந்த நாள் கொண்டாடிய ராய்ப்பூர் நகர பாஜக மேயரின் மகன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜகவை  சேர்ந்த மீனாள் சவுபே சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூர் மாநகர மேயராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். சவுபே பதவியேற்ற சில மணி நேரங்களில், மேயரின் வீடு உள்ள சங்கோரபட்டா பகுதியில் மேயரின் மகன் மிரினாக் சவுபே, நண்பர்கள் சிலருடன் சேர்ந்து நடுரோட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்தி உள்ளார். மேலும்பட்டாசு சத்தமும் காதைப் பிளந்துள்ளதால் … Read more

நெல்லை: காங்கிரஸ் நிர்வாகி ஜெயகுமார் கொலை வழக்கு; விசாரணையைத் தீவிரப்படுத்தும் சிபிசிஐடி!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரான ஜெயக்குமார், கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் 2-ம் தேதி மாயமானார். பின்னர் மே 4-ம் தேதி திசையன்விளை அருகிலுள்ள கரைசுத்துப் புதூரில் உள்ள அவரது வீட்டிற்கு அருகேயுள்ள தோட்டத்தில் அவரது உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டது. இது குறித்து உவரி காவல் நிலைய போலீஸார் , 10 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம்  சிபிசிஐடி … Read more