ஐபோனை வாங்கப் போறீங்களா? அப்போ ஒரிஜினல் iPhone அ இப்படி கண்டுபிடிங்க

iPhone Reality: இன்றைய காலகட்டத்தில், அனைவரிடமும் ஸ்மார்ட்போன் இருக்கிறது. குறிப்பாக இதில் ஐபோன் முதலிடத்தில் உள்ளது. ஏனெனில் அதன் டிஜிட்டல், லுக் மற்றும் அம்சங்கள் அனைத்தும் மிகவும் பிரபலமானது. விலை கூடுதலாக இருந்தாலும் அதன் அம்சங்கள் மற்றும் அற்புதமான தோற்றம் மக்களை அதிகமாக ஈர்க்கின்றது. எனினும் விலை உயர்வால் மிக சிலரே இந்த போனை வாங்க முடிகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், மக்கள் செகண்ட் ஹேண்ட் ஐபோனை வாங்குகின்றனர். ஆனால், சில நேரங்களில் கடைக்காரர் போலி ஐபோனை விற்பனை செய்கின்றனர். அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் வைத்திருக்கும் ஐபோன் ஒரிஜினல் ஆ அல்லது போலி ஆ என்பதை கண்டறிவது மிகவும் கடினம். எனினும் சில டிப்ஸ் மூலம் அவற்றை கண்டறிய முடியும்.

1. பேக்கேஜிங் மற்றும் எக்ஸேசரிஸ் ஐ சரிபார்க்கவும்:
ஒரிஜினல் ஐபோன் பாக்ஸ் நல்ல தரம் வாய்ந்ததாக இருக்கும். ஹை க்வாலிட்டி கொண்ட இமேஜ் மற்றும் டெக்ஸ்ட் அச்சிடப்பட்டு இருக்கும். அதே நேரத்தில், போலி ஐபோனின் பாக்ஸ் மோசமான தரத்தில் இருக்கும், அச்சிடுதல் மோசமாக இருக்கலாம் மற்றும் கொடுக்கபட்டு இருக்கும் தகவல் தவறாக இருக்கலாம். ஒரிஜினல் ஐபோன் பாக்ஸ் இல் உள்ள எக்ஸ்சேரிஸ் நல்ல தரமானதாக இருக்கும். போலி போன்களில் தரம் குறைந்த எக்ஸ்சேரிஸ் ஆக இருக்கலாம்.

2. ஐபோனின் பில்ட் குவாலிட்டி
ஒரிஜினல் ஐபோன் பிரீமியம் பொருட்களால் ஆனது. பொத்தான்கள் சரியாகப் பொருந்தி சீராக இயங்கும். விளிம்புகள் மென்மையாகவும், அனைத்து பகுதிகளும் சரியாக இணைக்கப்பட்டு இருக்கும். அதேசமயம் போலி ஐபோன் ஆனது பிளாஸ்டிக் அல்லது தரமற்ற பொருட்களால் செய்யப்பட்டிருக்கலாம். பொத்தான்கள் தளர்வாகலாம் அல்லது இருக்கலாம்.

3. சாஃப்ட்வேயர் மற்றும் அம்சங்கள்
ஒரிஜினல் ஐபோன் எப்போதும் ஆப்பிளின் iOS இயக்க முறைமையில் இயங்கும். அதேசமயம் போலி ஐபோன்கள் பெரும்பாலும் iOS போன்ற ஆண்ட்ராய்டு இயக்க முறைமையில் இயங்கும். ஒரிஜினல் ஐபோனில் ஆப்பிளின் ஆப் ஸ்டோர் உள்ளது. அதேசமயம் நீங்கள் வைத்திருக்கும் ஐபோனில் கூகிள் ப்ளே ஸ்டோர் அல்லது வேறு ஏதேனும் ஆண்ட்ராய்டு செயலி இருந்தால், அது போலியானது.

ஒரிஜினல் ஐபோன்களில், “Hey Siri” என்று கூறி அல்லது பவர் பட்டனை அழுத்தி சிரியியை செயல்படுத்தலாம். அதேசமயம் நீங்கள் வைத்திருக்கும் போனில் சிரி வேலை செய்யவில்லை என்றால், அது போலியாக இருக்கலாம். ஒரிஜினல் ஐபோனில், திரையின் மேலிருந்து அல்லது கீழிருந்து ஸ்வைப் செய்வது கட்டுப்பாட்டு மையத்தைத் திறக்க வேண்டும்.

4. தொடர் எண்ணைச் சரிபார்க்கவும்
ஐபோனில், Settings இல் சென்று, பின்னர் General என்பதைக் கிளிக் செய்து, பின்னர் About விருப்பத்தைக் கிளிக் செய்யவும். இங்கே நீங்கள் வரிசை எண்ணைக் காண்பீர்கள். பின்னர் ஆப்பிளின் Check Coverage வலைத்தளத்திற்கு (https://checkcoverage.apple.com/) சென்று சீரியல் எண்ணை உள்ளிடவும். ஐபோன் ஒரிஜினலாக இருந்தால் ஐபோன் மாடல், உத்தரவாத நிலை மற்றும் பிற முக்கிய விவரங்கள் வலைத்தளத்தில் தெரியும்.

5. IMEI எண்ணைச் சரிபார்க்கவும்
IMEI  ஐ சரிப்பார்க்க ஐபோனில் *#06# ஐ டயல் செய்யவும். இதற்குப் பிறகு, திரையில் IMEI எண் தோன்றும். ஐபோனின் பாக்ஸ் மற்றும் சிம் கார்டில் IMEI எண் எழுதப்பட்டு இருக்கும். பாக்ஸ் மற்றும் சிம் கார்டில் எழுதப்பட்ட எண்களுடன் தொலைபேசியில் காட்டப்பட்டுள்ள IMEI எண்ணைச் சரிபார்க்கவும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.