2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதல் (26/11) வழக்கில் முக்கியக் குற்றவாளியான பாகிஸ்தானில் பிறந்த கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் தஹாவூர் ராணாவை அமெரிக்காவிடம் இருந்து நாடு கடத்தியது முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் முதிர்ச்சியடைந்த மற்றும் திறமையான ராஜதந்திர முயற்சிகளின் விளைவாகும். “ஆனால், இந்த விஷயத்தில் எந்த முயற்சியும் எடுக்காத பிரதமர் நரேந்திர மோடி அரசு, பலன்களைப் பெற்று வருகிறது” என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் ஒரு அறிக்கை வெளியிட்டு, […]