Chennai Super Kings: நடப்பு 18வது ஐபிஎல் தொடரின் (IPL 2025) இரண்டாம் பாதி போட்டிகள் தொடங்கியிருக்கின்றன எனலாம். அனைத்து அணிகளும் குறைந்தபட்சம் தலா 7 போட்டிகளை விளையாடிவிட்டன.
Chennai Super Kings: புள்ளிப்பட்டியல் நிலவரம்
குஜராத், டெல்லி, ஆர்சிபி, பஞ்சாப், லக்னோ அணிகள் தலா 10 புள்ளிகளுடன் முதல் 5 இடத்தை ஆக்கிரமித்துள்ளன. மும்பை 8 புள்ளிகளுடன் 6வது இடத்திற்கு முன்னேறியிருக்கும் நிலையில், கொல்கத்தா 6 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான், ஹைதராபாத், சிஎஸ்கே அணிகள் தலா 4 புள்ளிகளுடன் முறையே கடைசி 3 இடங்களில் உள்ளனர்.
Chennai Super Kings: சிஎஸ்கேவுக்கு பிளே ஆப் வாய்ப்பு இருக்கா?
இதில் 10வது இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏறத்தாழ அதன் பிளே ஆப் வாய்ப்பை 95% இழந்துவிட்டது (CSK Play Off Chances) எனலாம். இன்னும் 6 லீக் போட்டிகளே சிஎஸ்கேவுக்கு மிச்சம் இருக்கிறது. அதில் 3 போட்டிகள் சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. சிஎஸ்கே பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற வேண்டும் என்றால் அடுத்து வரும் 6 போட்டிகளிலும் பெரிய நெட் ரன்ரேட் வித்தியாசத்தில் வென்றாக வேண்டும்.
Chennai Super Kings: தோல்விக்கு பின் தோனி சொன்னது என்ன?
தற்போது 8 போட்டிகளில் விளையாடி 4 புள்ளிகளை பெற்றிருக்கும் சிஎஸ்கே, அடுத்த 6 போட்டிகளை வென்றால் 16 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற நல்ல வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் தற்போதைய புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் பார்த்தால் சிஎஸ்கேவுக்கு அந்த வாய்ப்பு ஓரளவு குறைவாகவே இருக்கிறது.
#MIvCSK pic.twitter.com/1R2kK6ThmZ
— Chennai Super Kings (@ChennaiIPL) April 20, 2025
மேலும், மும்பை அணிக்கு எதிரான தோல்விக்கு பேசிய கேப்டன் தோனியும் (MS Dhoni), அடுத்த 6 போட்டிகளையும் வெல்ல முயற்சிப்போம், ஒருவேளை பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறாவிட்டால் அடுத்த வருடத்திற்கான காம்பினேஷனை வைத்து சிறந்த பிளேயிங் லெவனை உருவாக்க முயற்சிப்போம் என்றும் பேசியிருந்தார்.
Chennai Super Kings: சிஎஸ்கே கழட்டிவிடப்போகும் 5 வீரர்கள்
இதன்மூலம், சிஎஸ்கே அதன் அடுத்தகட்டத்தை நோக்கி நகரத்தொடங்கிவிட்டது எனலாம். அந்த வகையில், இந்த சீசனுக்கு பின் நடைபெற இருக்கும் மினி ஏலத்தில் இந்த 5 வீரர்களை சிஎஸ்கே அணி நிச்சயம் கழட்டிவிடும். அவர்கள் யார் யார் என்பதை இங்கு காணலாம்.
CSK: டெவான் கான்வே
டெவான் கான்வேவை (Devon Conway) மெகா ஏலத்தில், ரூ.6.25 கோடி கொடுத்து சிஎஸ்கே வாங்கியது. இவருக்கும் ஓரிரு போட்டிகளில் மட்டுமே சிஎஸ்கே இந்தாண்டு வாய்ப்பளித்தது. இவரின் சமீபத்திய ஃபார்ம் மிக மோசமாக இருக்கும் காரணத்தால், நிச்சயம் இவரை விடுவித்துவிட்டு, வேறு ஒரு வெளிநாட்டு ஓபனிங் பேட்டரை நோக்கி நகர்வார்கள். ரச்சின் ரவீந்திரா இளம் வீரர் என்பதால் அவரை நிச்சயம் வெளியே விடமாட்டார்கள், தற்சமயத்திற்கு…
CSK: ராகுல் திரிபாதி
ராகுல் திரிபாதியை (Rahul Tripathi) ரூ.3.40 கோடி கொடுத்து சிஎஸ்கே எடுத்தது. இவரும் நல்ல ஃபார்மில் இல்லை. கொடுத்த தொகைக்கும் இவர் முழுமையான திறனை வெளிப்படுத்தவில்லை. அப்படியிருக்க இவரை வெளியே வைத்துவிட்டு வேறு இந்திய பேட்டரை நோக்கி நகர்வார்கள்.
CSK: சாம் கரண்
சாம் கரண் (Sam Curran) ரூ.2.4 கோடி கொடுத்து சிஎஸ்கே மெகா ஏலத்தில் தூக்கியது. இவரும் சமீபத்தில் பெரியளவு சோபிக்கவில்லை. இங்கிலாந்து டி20 அணியிலும் தற்போது இவர் விளையாடுவதில்லை. பந்துவீச்சிலும் சொதப்புகிறார். அப்படியிருக்க இவருக்கு பதில் வேறு ஒரு வெளிநாட்டு ஆல்-ரவுண்டரை சிஎஸ்கே எடுக்க முயற்சிக்கும், கேம்ரூன் கிரீனுக்கு நிச்சயம் பெரிய தொகையை அடுத்தாண்டு ஒதுக்க வாய்ப்புள்ளது.
CSK: ரவிசந்திரன் அஸ்வின்
ரவிசந்திரன் அஸ்வினை (Ravichandran Ashwin) ரூ.9.75 கோடி கொடுத்து சிஎஸ்கே எடுத்தது. நிச்சயம் இவரை வெளியே விட சிஎஸ்கே யோசிக்கும் என்றாலும் இவரை பொறுத்தவரை இரண்டு ஆப்ஷன்கள் சிஎஸ்கேவுக்கு இருக்கும். ஒன்று, அஸ்வின் இந்த சீசனோடு ஓய்வை அறிவித்தால் இவரை அப்படியே விடுவித்துவிடலாம். இல்லை அவர் தொடர்ந்து விளையாட விரும்புகிறார் எனும்பட்சத்தில் அவரை மினி ஏலத்திற்கு விடுவித்துவிட்டு இதைவிட குறைந்த தொகையில் எடுத்துக்கொள்ளலாம்.
CSK: ரவீந்திர ஜடேஜா
ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) ரூ.18 கோடி கொடுத்து தக்கவைத்தது சிஎஸ்கே. எனவே, இவரையும் விடுவிப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால், இவருக்கும் அஸ்வினுக்கு கொடுத்தது போல் இரண்டு ஆப்ஷன்களை கொடுக்கலாம். மினி ஏலத்திற்கு வந்தாலும் நிச்சயம் இவரை தூக்க சிஎஸ்கே போராடும். ஓரளவு குறைந்த தொகையில் தூக்கினாலும் சிஎஸ்கேவுக்கு லாபம் தான். சிஎஸ்கே இதை செய்வதற்கு வாய்ப்பு குறைவு என்றாலும் செய்தால் மட்டுமே அணிக்கு நல்லது.
Chennai Super Kings: கம்பேக் கொடுக்க காத்திருக்கும் சிஎஸ்கே
இந்த 5 வீரர்களை விடுவிப்பது மூலம் மட்டும் சிஎஸ்கேவுக்கு ரூ.39.8 கோடி கையிருப்பில் இருக்கும். இதைவைத்துக் கொண்டு அணியை இன்னும் பலப்படுத்தலாம். ருதுராஜ் நிச்சயம் அடுத்தாண்டும் விளையாடுவார், ஷேக் ரஷீத் – ஆயுஷ் மாத்ரே – அன்ஷூல் கம்போஜ் – வன்ஷ் பேடி – ராமசந்திர கோஷ் உள்ளிட்ட இளம் இந்திய வீரர்கள் சிஎஸ்கேவுக்கு கிடைத்திருப்பதால் அடுத்தாண்டு தோனி சொன்னதுபோல் முரட்டு கம்பேக்கிற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.
2020இல் மோசமாக வெளியேறி, 2021இல் கோப்பையை அடித்தது சிஎஸ்கே. 2022 தொடரிலும் மோசமாக வெளியேறி 2023 தொடரில் கோப்பையை அடித்திருந்தது. ஒருவேளை இந்த முறையும் மோசமாக தொடரில் இருந்து வெளியேறினால்….