வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
நம்மில் பலரும் வெளிமாநிலங்களுக்கு அல்லது நீண்ட தூர சுற்றுலா செல்வது என்றால் நாம் பயணிக்க ரெயில் போக்குவரத்து சேவையை தான் தேர்ந்தெடுப்போம்.
குறைந்த கட்டணத்தில், சவுகரியமான பயணத்தை வழங்கும் ரயில் சேவையானது இந்திய மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் போக்குவரத்து சேவையாகும்.
நாம் திட்டமிடும் இடத்திற்கு ரயிலில் டிக்கெட் பயணச்சீட்டு எடுத்திட ஐ.ஆர்.டி.சி. மற்றும் இணைய செயலிகள் மூலம் 60 நாள்களுக்கு முன்பாகவே இருக்கைகளை முன்பதிவு செய்ய முடியும்.

இப்படி ரயில் சேவையில் பயணிகளுக்கு பல சலுகைகள் இருக்கும் பட்சத்தில் உணவு மற்றும் பானங்கள் வழங்க எக்ஸ்பிரஸ் ரயில்களில் பேன்ட்ரி கார் என்ற பிரத்யேக பெட்டி ஒன்று இருக்கும். அதில் குறிப்பிட்ட உணவு வகைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு பயணிகளுக்கு வழங்கப்படும்.
பிடித்த உணவுகள்
பொதுவாக பயணங்களின் போது, சிலருக்கு குறிப்பிட்ட உணவு வகைகள் மட்டுமே ஒத்துக்கொள்ளும். அதோடு நமக்கு பிடித்த உணவுகளை சாப்பிடவும் தோன்றலாம். ஆனால் அதெல்லாம் பேன்ட்ரி கார் உணவு மெனுவில் இல்லாமல் இருக்கும்.

அப்போது என்ன செய்வது என்று குழப்பம் அடையும் பயணிகள் ரயில் நிலையங்களில் உள்ள உணவு கடைகளை தேடியும், அங்குள்ள கேட்டரிங் சேவைகளை தேடியும் அலைவார்கள். இப்படியெல்லாம் நீங்கள் அலைந்து திரிந்து உங்கள் பயண நேரத்தை வீணாக்காமல் இணையத்தில் உங்களுக்கு பிடித்த உணவுகளை ஓட்டலில் ஆர்டர் செய்யலாம்.
இணையதளங்கள்
அதாவது ரயில் பயணத்தின் போது ஐ.ஆர்.டி.சி. இ-கேட்ரிங் (IRTC eCatering) மற்றும் ரெயில்மித்ரா (RailMitra) போன்ற இணையத்தளங்களில் உங்களுக்கு பிடித்த உணவுகளை நீங்கள் செல்லும் ரெயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள ஓட்டல்களில் ஆர்டர் செய்யலாம்.

இதற்கு உங்களது உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டில் உள்ள 10 இலக்கம் கொண்ட பி.என்.ஆர். எண் தேவைப்படும். இந்த எண்ணின் மூலம் அல்லது ரெயில் எண் மற்றும் பயணிக்கும் தேதி ஆகியவை மூலமும் ஆர்டர் செய்யலாம்.
ஆர்டர் செய்வது எப்படி?
நீங்கள் இணையதளம் வாயிலாக பி.என்.ஆர் எண் மூலம் உங்களுக்கு பிடித்த உணவுகளையும், எந்த ரயில் நிலையத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதையும் தேர்வு செய்ய வேண்டும். பின் உங்களுக்கு வழங்கப்படும் டெலிவரி கோடு எண்ணை, உணவு வழங்கும் ஊழியரிடம் சொல்லிவிட்டு உணவை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு பணத்தை நீங்கள் ஆன்லைன் வாயிலாகவும், கேஸ் ஆன் டெலிவரியாகவும் செலுத்தலாம்.

இந்த இணையதளங்கள் மட்டுமின்றி உணவு விநியோகம் செய்யும் சுவிகி போன்ற இணைய செயலிகள் வாயிலாகவும் ஆர்டர் செய்யலாம். காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை வாரத்தின் 7 நாள்களும் நீங்கள் ஆர்டர் செய்து உணவை பெற்று கொள்ளலாம். ஒருவேளை உங்கள் ரயில் தாமதமாக வந்து உங்களிடம் உணவு வழங்கப்படவில்லை என்றால் நீங்கள் செலுத்திய முழு பணத்தையும் பெற்றுக்கொள்ளலாம்.
My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா’ கட்டுரை

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு – `சுற்றுலா’. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
-
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
-
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
-
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
-
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025
-
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
-
உங்கள் படைப்புகளை: [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
-
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
-
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
-
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.