சென்னை; 69பேர் உயிரிழப்புக்க காரணமாக இருந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் திமுக முன்னாள் பிரமுகர் கண்ணுகுட்டி உள்பட 2 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. விசாரணை அதிகாரி முன்பு தினசரி ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் இருவருக்கும் ஜாமின் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த முறை கண்ணுகுட்டியின் ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில், இந்த முறை நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த அந்த பகுதிகளைச் […]
