நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. விளையாடிய 10 போட்டிகளில் 7ல் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு காரணம் விராட் கோலியின் அங்கர் ரோலும் ஃபில் சால்ட் கொடுக்கும் நல்ல தொடக்கமும்தான்.
இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடத்திய நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் ஃபில் சால்ட் பங்கு பெற்றார். இந்த நிகழ்ச்சியில் ஃபில் சால்டிடம் தொகுப்பாளர் நீங்கள் ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் நட்புக்கு இடம் கிடையாது என கூறினீர்களே? தற்போது நீங்களும் விராட் கோலியும் நல்ல நண்பர்கள் கிடையாதா? என கேட்டார். அதற்கு பதில் அளித்த ஃபில் சால்ட், ஆம் நண்பர்கள் கிடையாது என்னுடன் பணிபுரிபவர் அவ்வளவுதான் என கூறினார்.
ஆனால் உடனே ஐயோ தவறாக பதில் அளித்துவிட்டோம் என்பதை புரிந்துகொண்டு மீண்டும் பதில் கூறிய அவர், நான் யாருடன் எல்லாம் கிரிக்கெட்டில் விளையாடுகிறேனே அவர்கள் அனைவருமே என்னுடைய நண்பர்கள்தான். நீங்கள் கேட்கும் கேள்விக்கு சர்ச்சையாக பதில் கூறி நான் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை என கூறினார். இதையடுத்து தொகுப்பாளர், அப்போ நீங்களும் விராட் கோலியும் நண்பர்கள் கிடையாதா? என கேட்டார். அதற்கு கொலிக்ஸ் என பதில் அளித்தார் ஃபில் சால்ட்.
ஃபில் சால்ட் கூறிய இந்த பதில் தற்போது சர்ச்சையாக மாறி உள்ளது. இவரது இந்த பதிலை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ஆர்சிபி அணி இந்த ஆண்டு சிறப்பாக விளையாடி வருவதால் கோப்பை கனவில் அந்த அணியின் ரசிகர்கள் உள்ளனர். அந்த அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுடன் போட்டிகள் இருக்கின்றன. இதில் ஆர்சிபி அணி ஒன்றில் வென்றால் கூட பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். அதுவே முதல் இடத்தை தக்க வைக்க வேண்டும் என்றால் இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் வென்றாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: வைபவ் சூரியவன்ஷி இல்லை! ஐபிஎல்லில் அதிவேக சதம் அடித்தது இவர் தான்!
மேலும் படிங்க: CSK: தீபக் ஹூடா சிறப்பாக விளையாடினார்… ஹசி புகழாரம் – ஷாக்கில் ரசிகர்கள்