Ajith: "அஜித் சார் விருது வாங்கினது பெருமை!" – நடிகை ஷாலினி பேட்டி

நடிகர் அஜித் நடிப்பு, ரேஸ் என கலக்கிக் கொண்டிருக்கிறார். நேற்றைய தினம், ராஷ்டிரபதி பவனில் குடியரசு தலைவர் திரெளபதி முர்முவிடமிருந்து பத்ம பூஷன் விருதை பெற்றிருந்தார் நடிகர் அஜித். விருது பெறும் தருணத்தில் நடிகை ஷாலினி மற்றும் அஜித்தின் குழந்தைகள் நெகிழ்ச்சியுடன் கைதட்டிய காணொளியும் இணையத்தில் வைரலானது.

நடிகர் அஜித் குமார்
நடிகர் அஜித் குமார்

விருது பெற்றதும் சில மீடியாகளை சந்தித்துப் பேட்டியும் கொடுத்திருக்கிறார் அஜித். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரேஸ் வேளையில் வெளிநாட்டு ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருந்தார் அஜித். தற்போது இந்திய ஊடங்கங்கள் சிலவற்றைக்குப் பேட்டிக் கொடுத்திருக்கிறார். அங்கு அவர் பேசிய விஷயங்கள் பலவற்றையும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விருது பெற்றப் பிறகு நடிகர் அஜித் குடும்பத்துடன் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவரைக் காண ரசிகர்கள் குவிந்திருந்தனர்.

Ajith & Shalini
Ajith & Shalini

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் ஏதும் சொல்லாமல் நன்றி தெரிவித்து தனியாக சந்திப்போம் எனக் கூறி முடித்துக் கொண்டார் அஜித். இவரை தொடர்ந்து இவரின் மனைவியும் நடிகையுமான ஷாலினி செய்தியாளர்களிடம் பேசுகையில், ” ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. இது நல்ல அனுபவமாக இருந்தது. ராஷ்ட்ரபதி பவனில் அஜித் சார் விருது பெற்றதை பார்க்கும்போது ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தது. பெருமையான தருணம் இது.” எனக் கூறி விடைபெற்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.