நாட்டில் 22 லட்சம் டிரைவர்கள் பற்றாக்குறை: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

நாட்டில் 22 லட்சம் டிரைவர்கள் பற்றாக்குறை இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தில் அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது: இந்தியாவில் 22 லட்சம் டிரைவர்கள் பற்றாக்குறை இருப்பதாக உலக வங்கி அறிக்கை தெரிவிக்கிறது. நாட்டில் முறையான டிரைவிங் பயிற்சி வசதிகள் இல்லாதது விபத்துகளுக்கும் உயிரிழப்புக்கும் வழிவகுக்கிறது. நாடு முழுவதும் படிப்படியாக 1,600 டிரைவிங் பயிற்சி நிலையங்களை ஏற்படுத்தும் ரூ.4,500 கோடி செலவிலான திட்டத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் … Read more

உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொடுத்த அதிர்ச்சி: இந்திய பொருட்களுக்கு 27% பரஸ்பர வரி விதிப்பு

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 27 சதவீத பரஸ்பர வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புதன்கிழமை அதிரடியாக அறிவித்தார். முதலில் 26 சதவீத வரி விதிப்பு என அறிவிக்கப்பட்டு 27 சதவீத வரி விதிப்பு என்பதை வெள்ளை மாளிகை பின்னர் தெளிவுபடுத்தியது. 10 சதவீத அடிப்படை வரி விதிப்பு ஏப்ரல் 5-ம் தேதியிலிருந்தும், தனிப்பட்ட பரஸ்பர அதிக வரிவிதிப்பான 16 சதவீதம் ஏப்ரல் 9-ம் தேதிக்குப் பிறகும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப் … Read more

விரையில் இ சேவை மூலம் அரசு பேருந்து டிக்கட் முன்பதிவு. அறிமுகம்

சென்னை விரைவில் இ சேவை மூலம் அர்சு பேருந்து டிக்கட்டுகளை முன் பதிவு செய்யும் வசதி அறிமுகம்  செய்யப்பட உள்ளது. தமிழக்ச் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் உள்பட தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் தொலை தூர பஸ்களில் பயணிக்க முக்கிய பஸ் நிலையங்கள் மற்றும் ஆன்-லைன் மூலமாகவும், அங்கீகரிக்கப்பட்ட செயலி (ஆப்) மூலமாகவும் முன்பதிவு செய்து பயணிகள் பயணித்து வருகின்றனர். கிராமப்புற மக்கள் முன்பதிவு செய்ய … Read more

இந்த ஆண்டு இறுதிக்குள் 6 லட்சம் பேருக்கு பட்டா: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிவிப்பு

இந்த ஆண்டு இறுதிக்குள் 6 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என்றும் 50 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியத் தொகை வழங்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அறிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பதிலளித்துப் பேசியதாவது: முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு சமூக நலத்திட்டங்களும், அனைத்து வகையான சான்றிதழ்களும் வருவாய்த்துறை மூலமாகவே வழங்கப்படுகின்றன. மாதம் 50 … Read more

சித்தராமையா மீதான நில மோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி: கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு

கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில மோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி வழங்கி அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர மேம்பாட்டு ஆணையம் கையகப்படுத்தியது. இதற்கு மாற்றாக அவருக்கு மைசூருவின் பிரதான இடத்தில் 14 வீட்டு மனைகளை ஒதுக்கியது. கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட இடத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால் இதில் முறைக்கேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்து லோக் … Read more

தர்பூசணியில் ரசாயனக் கலவை இல்லை : உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி

சென்னை தமிழக உணவுப்பாதுகாப்புத்துறை  அதிகாரி தர்பூசணியில் ரசாயனக்  கல்வை இல்லை என அறிவித்துள்ளனர். தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் சாலை ஓரங்களில் தர்பூசணி, சாத்துக்குடி, இளநீர் போன்ற குளிர்பானக்கடைகள் கடைகள் அதிகரிக்க தொடங்கி உள்ளன.  , சமீபத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் தர்பூசணிகளில் செயற்கை நிறமூட்டிகள் ஊசி மூலம் செலுத்தப்படுவதாகவும், டிஸ்யூ பேப்பரில் தர்பூசணி பழத்தை தொட்டு எடுத்தால் அந்த சிவப்பு சாயம் அதில் ஒட்டிக் கொள்ளும் என்றும் கூறியிருந்தார். இதலி … Read more

பாஜக அரசு நிறுவியுள்ள மிக மோசமான பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்: வக்பு மசோதா குறித்து விஜய் சாடல்

வக்பு சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் இஸ்லாமியர்களுடன் இணைந்து போராடுவோம் என்றும் தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு சட்டத் திருத்த மசோதா, மதச்சார்பற்ற இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கைகளையும் அரசியலமைப்பின் மாண்பையும் மீண்டும் ஒருமுறை கேள்விக்குள்ளாகியுள்ளது. ‘வக்பு வாரியச் சட்டம்’ என்பது, இஸ்லாமியர்களின் இறையியல் வாழ்வு மற்றும் சமூக பொருளாதாரத்தோடு பின்னிப் பிணைந்தது. வக்பு வாரியச் சட்டத்தை சிதைப்பது என்பது சிறுபான்மையினருக்கு நம் … Read more

மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேறியது வக்பு சட்ட திருத்த மசோதா: ஆதரவு 128; எதிர்ப்பு 95

புதுடெல்லி: மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்ட திருத்த மசோதா, மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நள்ளிரவு வரை நீடித்த விவாதத்துக்குப் பிறகு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 128 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும், 95 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இதனையடுத்து வக்பு சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. வக்பு சட்ட திருத்த மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது 12 மணி நேரம் காரசாரமான விவாதம் நடைபெற்றது. பின்னிரவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. … Read more

மியான்மர் நிலநடுக்கம் உயிரிழப்பு 3,085 ஆக உயர்வு

மியான்மிரில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,085 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய நகரான மண்டலே நகருக்கு அருகில் இதன் மையப் பகுதி காணப்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. சாலைகள், பாலங்கள் மற்றும் தகவல் தொடர்பு கட்டமைப்புகள் சேதம் அடைந்தன. பேரழிவை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. … Read more

சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்கள் புதிய சாதனை

சென்னை சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்கள் சரக்குகளை கையாள்வதில் புதிய சாதனை படைத்துள்ளன. சென்னை துறைமுகம் ஆணையம் மற்றும் காமராஜர் துறைமுகம் நிறுவன ஒம்இதலைவர் சுனில் பாலிவால், ”சென்னை துறைமுகம் மற்றும் எண்ணூர் காமராஜர் துறைமுகம் இணைந்து, சரக்கு கையாளுவதில் 100 மில்லியன் மெட்ரிக் டன்களை கடந்து ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது. மொத்தம் 103.36 மில்லியன் மெட்ரிக் டன்கள் கையாளப்பட்டுள்ளன. சென்னை துறைமுகம் 54.96 மில்லியன் மெட்ரிக் டன்களையும், காமராஜர் துறைமுகம் 48.41 மில்லியன் மெட்ரிக் … Read more