டெல்லி: மத்தியஅரசின் சாதிவாரி கணக்கெடுப்பு முடிவை வரவேற்பதாக தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் கொள்கையை மத்திய பாஜக அரசு ஏற்றுள்ளது என்றும், ஆனால், அதற்கான காலக்கெடு குறித்தும் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மத்திய கேபினட் அமைச்சரவை சாதிவாரி கணக்கெடுப்புக்கு அனுமதி வழங்கி உள்ளது. மக்கள் தொகை பொதுக்கணக்கெடுப்பின்போது சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். “இந்திய அரசியலமைப்பின் படி, மக்கள் தொகை கணக்கெடுப்பு […]
