Travel Contest : எரிச்சலூட்டிய சிங்கப்பூர் அதிகாரி, ஆனாலும் இங்கு நேர ஒழுங்கு சூப்பர்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

சிங்கப்பூருக்கு சில முறை சென்று பார்த்து ரசித்திருந்தாலும்,  சில வருடங்கள் முன் சிங்கப்பூரில் ஒரு வேலைக்கு விண்ணப்பித்தேன். என்னுடைய நீண்ட நாள் (நெருங்கிய) நண்பர் அங்கேயே செட்டில் விட்டதால் தேவையான தகவல்கள் அனைத்தையும் சொன்னார். 

சுற்றுலா பயணிக்கு உண்டான விசாவில் வேலைக்குத் தேர்வு செய்யும் நேர்முகத் தேர்வுக்கு செல்ல அனுமதி உண்டா என்று சந்தேகம் வரவே, என் நண்பர் நேரடியாக அந்த அலுவலகத்திற்கே போன் செய்து விசாரிக்கும்படி ஐடியா கொடுத்தார். 

அதுபடியே நான் போன் செய்து அதற்குரிய நபருடன் பேசினேன். “தாராளமாக நீங்கள் டூரிஸ்ட் விசாவில் வரலாம். வேலை உங்களுக்குக் கிடைத்துவிட்டால் அதற்குத் தேவையான வசதிகளை நாங்கள் செய்து கொடுப்போம். ஒரு வேளை நீங்கள் தேர்வாகவில்லை என்றால் அதே விசாவில் நீங்கள் இந்தியா சென்று விடலாம்” என்று தைரியம் கொடுக்கவே அது படியே செய்தேன். 

நேர்முகத் தேர்வுக்கு இரண்டு நாட்கள் முன்னரே அங்கு சென்று ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கினேன். என் சிங்கப்பூர் நண்பரை அழைத்து “எங்காவது சுற்றிப் பார்க்கலாமா?” என்று கேட்டபோது அவர், “நீ கடந்த 3 – 4 முறை வந்தபோது சிங்கப்பூரின் முக்கியமான சுற்றுலா தலங்களைப் பார்த்துவிட்டாய். எனவே இந்த முறை நான் உன்னை சிங்கப்பூர் பீச்சுக்கு அழைத்துச் செல்கிறேன்” என்றார்.

பெரும்பாலான சுற்றுலா வாசிகள் சிங்கப்பூரின் சென்டோஸா, யுனிவர்சல் ஸ்டூடியோ, நைட் சஃபாரி, சிங்கப்பூர் ஃப்ளையர் என்று சுற்றுவார்களே தவிர சிங்கப்பூர் பீச்சுக்கு செல்ல மாட்டார்கள்.

எனவே நான் நண்பருடன் சிங்கப்பூர் பீச்சுக்கு சென்றபோது உள்ளூர்வாசிகள் சிலரைத் தவிர அதிகக் கூட்டம் இல்லை. சிங்கப்பூர் கடற்கரை சிறியதுதான். ஆனால் சுத்தமாக அழகாக இருந்தது. மற்ற இடங்களைப் போலவே அங்கும் கடற்கரை அழகை ரசித்து விட்டு விதவிதமாக சாப்பிட ஏராளமான உணவகங்கள்!

நாங்கள் பீச்சில் அலைந்துவிட்டு, சில புகைப்படங்களை எடுத்துவிட்டு, உணவருந்திவிட்டு அகன்றோம்.

என்னுடைய நேர்முகத் தேர்வு அன்று மறக்காமல் தேவையான சான்றிதழ்களை எடுத்துக் கொண்டு டாக்சியில் அந்த அலுவலகத்திற்கு விரைந்தேன்.

எப்படியும் குறிப்பிட்ட நேரத்திற்கு குறைந்தது 10 நிமிடம் முன்னால் போய் விடலாம் என்பது என் நம்பிக்கை. ஆனால் அதிசயமாக அன்று நடந்த சாலை விபத்து ஒன்றினால் போக்குவரத்து மிக மெதுவாக ஊர்ந்தது. அந்த ரீதியில் சென்றால் குறிப்பிட்ட நேரத்திற்கு அந்த அலுவலகத்திற்கு செல்வது கடினம் என்று உணர்ந்தேன்.

சிங்கப்பூரில் நேர ஒழுங்கிற்கு மிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அங்கு ரயில்கள் எல்லாம் மிகத் துல்லியமான நேரத்திற்கு வரும் / செல்லும்.

தாமதம் என்பதே கிடையாது. ஒரு முறை ரயிலில் சென்ற ஒரு பயணி விளையாட்டாக வாயிலிருந்த சூயிங்கத்தை எடுத்து ரயில் கதவில் ஒட்டி விட்டார்.

அது தானியங்கி கதவு என்பதால் பிரச்சினை ஏற்பட்டு அந்த ஒரு சம்பவத்தால் மற்ற ரயில்களும் தாமதமாகிவிட்டன. இந்த ஒரு நிகழ்வினால் இன்று வரை சிங்கப்பூரில் சூயிங்கம் / சிக்லெட் கிடையாது. தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே அந்த நேர ஒழுங்கை மதிக்க வேண்டும் என்று நான் சென்று கொண்டிருக்கும் அலுவலகத்திற்கு என் மொபைல் மூலம் அழைத்தேன்.என்னுடன் பேசிய பெண்மணியிடம் விபரத்தைக் கூறி நான் வருவதற்கு 20 முதல் 30 நிமிடம் வரை தாமதமாகலாம் என்று தெரிவித்தேன். அந்தப் பெண்மணி “அதனால் பரவாயில்லை வாருங்கள்” என்றார்.

நான் ஒருவழியாக அங்கு சென்று நேர்முகத் தேர்வு முடிந்தவுடன் அங்கிருந்த ஒரு சிங்கப்பூர் சீனர் என் கையைக் குலுக்கி நான் தேர்வாகியுள்ளதாகத் தெரிவித்தார்.

பிறகு அவரே “உங்கள் படிப்பு, பணி அனுபவம் இவற்றையும் தாண்டி சாலை விபத்தினால் இங்கே வரும் நேரம் தாமதமாகிவிடும் என்று முன்கூட்டியே எங்களுக்குத் தகவல் தெரிவித்த விதம் மிகவும் சிறப்பானது.

நான் இப்படிச் சொல்வதற்கு மன்னியுங்கள். இந்தியர்கள் பெரும்பாலும் நேரத்திற்கு மரியாதை கொடுப்பது கிடையாது என்பது எங்கள் அனுபவம். உங்களைப் போன்ற சிலர் அவ்வாறில்லாமல் இருப்பது மகிழ்ச்சிக்குரியது” என்றார்.

இந்தியர்களைக் குறை சொன்னவிதம் எரிச்சலூட்டியது என்றாலும் நான் சென்ற காரியம் வெற்றியடைந்ததில் எனக்கு மகிழ்ச்சியே.

My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா’ கட்டுரை

டூர்

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.

இந்த மாதத்திற்கான தலைப்பு – `சுற்றுலா’. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.

வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.   

பரிசுத்தொகை விவரம்:

  • முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)

  • இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)

  • நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)

நினைவில் கொள்க: 

  • நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025

  • ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.

  • உங்கள் படைப்புகளை: [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்

  • விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்

  • உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது. 

  • கட்டுரையின் தரத்தின்  அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.