சென்னை: அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளி பயணிகளை கனிவுடன் நடத்த வேண்டும் என பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தல் வழங்கி உள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில், மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்யும் பொழுது, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் கடைபிடிக்க வேண்டிய நிலையான இயக்க நடைமுறைகள் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து அமைச்சர் சிவசங்கர் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி, தமிழ்நாடு அரசு […]
