கொல்கத்தா: ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாக மேற்கு வங்க முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மீது வழக்கு தொடர அமலாக்கத் துறைக்கு மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் அனுமதி வழங்கியுள்ளார். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது ஆட்சியில் கடந்த 2011 முதல் 2021 வரை கல்வி அமைச்சராக இருந்தவர் பார்த்தா சாட்டர்ஜி. இவர் ஆசிரியர் பணிக்கு பணம் பெற்றுக்கொண்டு பணி நியமனங்களை வழங்கியதாகபுகார் எழுந்தது. இதுதொடர்பான விசாரணையில், அவர்மீதான […]
