இனி அந்த நம்பருக்கு Call பண்ணாதீங்க, ஹேக்கர்கள் வச்சிருக்கும் பொறி – சிக்கிக்கொள்வீர்கள்..!

Mobile Hacking Alert : டெக்னாலஜி எவ்வளவோ முன்னேறிவிட்டது என பெருமைப்பட்டுக் கொள்ளும் இந்த நேரத்தில், அதை வைத்தே விதவிதமாக நடக்கும் மோசடிகளும் கவலைகொள்ள வைக்கிறது. அனுமானிக்ககூட முடியாத வகையில் சைபர் மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனைப் பற்றியெல்லாம் நீங்கள் இதுவரை அறிந்திருக்கக்கூட மாட்டீர்கள். ஆம், உதவி.. அவசரம்.. என கூறி உங்கள் மொபைலில் இருந்து ஒரு நம்பருக்கு அவர்கள் மேற்கொள்ளும் அழைப்புகள் வழியாக கூட இப்போது மோசடிகள் நடக்க தொடங்கிவிட்டன. இந்த தகவல் ஆச்சரியமாகவும், பயமாகவும், விநோதமாகவும் கூட இருக்கலாம். ஆனால், உண்மை… இப்படியும் மோசடிகள் நடக்கத் தொடங்கிவிட்டன. யாரோ ஒருவர் வந்து மேற்கொள்ளும் அழைப்பு மூலம் எப்படி மோசடி நடக்கும் என யோசிக்கிறீர்கள் என்றால், அதற்கான விடையை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

பல நேரங்களில் சாலையில் செல்லும்போது, தெரியாத ஒருவர் உங்கள் மொபைலைக் கேட்டு, ஒரு முக்கியமான அழைப்பு செய்ய வேண்டும், தயவுசெய்து அந்த எண்ணை டயல் செய்யுங்கள் என்று கூறுவதை எதிர்கொண்டிருப்பீர்கள். அந்த அடையாளம் தெரியாத நபர் தனது மொபைல் போன் அணைக்கப்பட்டுள்ளதாகக் (Mobile Switch Off) கூறுவார். அப்படிப்பட்ட சூழ்நிலையில், நீங்களும் அவரை நம்பி, உங்கள் ஸ்மார்ட்போனை அவருக்குக் கொடுத்து இருப்பீர்கள். ஆனால் இனி அப்படி செய்யும்போது உஷாராக இருக்க வேண்டும்.  

ஒரு புதிய அச்சுறுத்தல் குறித்து சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நிபுணர்களின் கூற்றுப்படி, உதவுவது பரவாயில்லை, ஆனால் ஒருவர் மற்றவரை குருட்டுத்தனமாக நம்பும் தவறைச் செய்யக்கூடாது. ஏனென்றால் இந்த சைபர் திருட்டு விளையாட்டு ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிட உரையாடலின் போது நடந்துவிடும் என்கின்றனர். அதாவது, அந்த மர்ம நபர்கள் உங்களின் தொலைபேசிகளில் ஏதோ ஒரு குறியீட்டை டயல் செய்வார்கள் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அப்படியே, உங்கள் ஸ்மார்ட்போனில் ஹேக்கிங் செயலியை இன்ஸ்டால் செய்யவும் முயற்சிப்பார்கள். அதில் தான் மோசடி நடக்கும். பெரும்பாலும் இப்படியான மோசடிகள் நெரிசலான பகுதிகளில், உதவி என்ற பெயரில் மக்களிடம் மொபைல் போன்கள் கேட்கப்பட்டு நடக்கின்றன. மோசடி செய்பவரின் கைகளுக்கு போன் போனவுடன், அவர் தனது வேலையைச் செய்து விடுகிறார்.

நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு சில நிமிடங்களில், ஒரு மோசடி செய்பவர் உங்கள் ஸ்மார்ட்போனை கேட்டு அதில் பல குறியீடுகளை டயல் செய்யலாம், இது உங்கள் அழைப்புகளை ஃபார்வேர்டு செய்ய வழிவகுக்கும். மேலும், அழைப்பு ஃபார்வேர்டு செய்யப்பட்டது என்பது யாருக்கும் தெரியாத வகையில் ஒரு செயலியை அவர்கள் நிறுவுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் தனிப்பட்ட உரையாடல் (Private Chat history) மோசடி செய்பவர்களைச் சென்றடையும்.

நீங்கள் தொலைபேசியின் ஆல்ரெடி இருக்கும் செயலி அல்லது கூகிள் செயலி மூலம் அழைப்புகளைச் செய்தால், அதன் அமைப்புகளுக்குச் (Settings) செல்லவும். இங்கே Call forwarding விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். இதைச் செய்வதன் மூலம் அழைப்பு ஃபார்வேர்டு செய்யப்படுகிறதா இல்லையா என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். Call forwarding இயக்கத்தில் இருந்தால், அதை அணைக்கவும். இதன் மூலம் நீங்கள் மோசடிகளை தடுக்கலாம்.

மேலும் படிக | Unified Digital ID System: புதிய அரசாங்க போர்டல்… Aadhaar, PAN, Voter ID அனைத்தையும் ஒரே இடத்தில் அப்டேட் செய்யலாம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.