இன்றைய போட்டியில் மழை வந்தால் ஆர்சிபி அணிக்கு பெரிய பாதிப்பு?

ஐபிஎல் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது. தொடர்ந்து படு தோல்விகளை சந்தித்து வருவதால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் அவரது ரசிகர்களுக்கும் ஒரு தீரா காயமாக அமைந்துள்ளது. இந்த சீசனில் இன்னும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நான்கு போட்டிகள் மீதம் உள்ளது. இவற்றில் வெற்றி பெற்று அடுத்த ஆண்டு மீண்டும் பழைய உத்வேகத்துடன் வர தயாராகி வருகிறது. இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூரில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.

கடந்தாண்டு இதே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றிருந்தால் பிளே ஆப்பிற்கு தகுதி பெற்று இருக்கும். ஆனால் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில் இதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் பழி தீர்க்கமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இருப்பினும் இன்றைய போட்டியில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மழை காரணமாக பாதியில் மைதானத்தை விட்டு வெளியேறினார். பின்னர் சிறிது நேரத்தில் மழை நின்றதால் மீண்டும் பயிற்சியை தொடங்கினர். இன்று பெங்களூரில் மழை பெய்ததற்கான வாய்ப்புகள் அதிக அளவு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரவு 8 மணி முதல் 9 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பெங்களூர் சின்னசாமி மைதானம் மிகச் சிறந்த வடிகால் வசதிகளை கொண்டுள்ளது. எனவே எவ்வளவு மழை பெய்தாலும் அடுத்த பத்து நிமிடங்களில் போட்டியை நடத்த முடியும்.

இதனால் முழு போட்டியும் தடை பட எந்த வாய்ப்பும் இருக்காது என்று கூறப்படுகிறது. இந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பஞ்சாப் அணியும் விளையாடிய போது மழை குறுக்கிட்டதால் 14 ஓவராக போட்டி மாற்றப்பட்டது. அந்த போட்டியில் பெங்களூரு அணி தோல்வியடைந்து இருந்தது. மேலும் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தோல்வி அடையும் பட்சத்தில் புள்ளி பட்டியலிலும் பின் தங்க அதிக வாய்ப்புள்ளது. சென்னை அணிக்கு தோற்றாலும் ஜெயிச்சாலும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.