மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி இன்று பெங்களூரில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஏற்கனவே பிளே ஆப் ரேஸில் இருந்து வெளியேறி இருந்தாலும் இன்றைய போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கினர். மறுபுறம் ஆர்சிபி அணிக்கு இன்றைய வெற்றி அவர்களின் பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்வதற்கு முக்கியமானதாக இருந்தது. டாஸ் வென்ற தோனி முதலில் ஃபீலிங் தேர்வு செய்தார். ஆர்சிபி அணியில் ஒரு சில மாற்றங்கள் இருந்தாலும், சென்னை அணியில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.
ஆர்சிபி பேட்டிங்
ஆர்சிபி அணிக்கு ஆரம்பமே அசத்தலாக இருந்தது. ஜேக்கப் பெத்தேல் மற்றும் விராட் கோலி கூட்டணி முதல் விக்கெட்டிற்கு 97 ரன்கள் சேர்த்தனர். இருவரும் அரை சதம் அடிக்க ஆர் சி பி அணி ஒரு நல்ல நிலையில் இருந்தது. ஜேக்கப் பெத்தேல் 55 ரன்கள், விராட் கோலி 62 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தனர். ஒரு கட்டத்தில் 250 ரன்கள் வருமா என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், 14வது ஓவருக்கு மேல் சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பாக பந்து வீசியது. குறிப்பாக பத்திரனா கடந்த போட்டிகளை விட இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசினர். மூன்று முக்கியமான விக்கெட்களை எடுத்து ரன்களை கட்டுப்படுத்தினார்.
ஆனால் கடைசியில் களம் இறங்கிய ரொமாரியோ ஷெப்பர்ட்14 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடித்து போட்டியை ஆர்சிபி பக்கம் மாற்றினார். கடைசி இரண்டு ஓவர்களில் சிக்ஸர் மலை பறக்க ரொமாரியோ ஷெப்பர்ட் 53 ரன்கள் அடித்தார். 170 180 ரன் இருக்க வேண்டிய ஆர்சிபி அணியின் டோட்டல் 213 ரன்களாக மாறியது. 214 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது.
சென்னை அணி பேட்டிங்
மிகவும் கடினமான இலக்கை எதிர்த்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஓபனிங் நல்லபடியாக அமைந்தது. முதல் விக்கெட்டிற்கு 50 ரன்கள் சேர்த்த நிலையில் ஷேக் ரசித் ஆட்டம் இழந்தார். அடுத்து களம் இறங்கிய சாம் கரனும் ஐந்து பந்துகளில் எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்தார். அதன் பிறகு ஜோடி சேர்ந்த ஆயுஷ் மாத்ரே மற்றும் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக விளையாடினர். இந்த ஜோடி கிட்டத்தட்ட நூறு ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்தது. மிக சிறப்பாக ஆடிய ஆயுஷ் மாத்ரே 94 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டம் இழந்தார். அந்த நிமிடத்தில் இருந்து ஆட்டம் மாறியது. அடுத்த களமிறங்கிய பிரவீஸ் முதல் பந்திலே ஆட்டம் இழக்க தோனியும் கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார். கடைசி பந்தில் நான்கு ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் சிவம் துபே கிரீஸில் இருக்க யாஸ் தயாள் சிறப்பான யாக்கறை வீசினார். இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியை வென்றது.