இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஃபோக்ஸ்வாகன் குழமத்தின் ஸ்கோடாவின் கைலாக், குஷாக், ஸ்லாவியா மற்றும் ஃபோக்ஸ்வாகனின் டைகன், விர்ட்ஸ் என மொத்தமாக 5 மாடல்களில் மே 24, 2024 மற்றும் ஏப்ரல் 1, 2025 தயாரிக்கப்பட்ட சுமார் 47,235 யூனிட்டுகளில் ஏற்பட்டடுள்ள சீட் பெல்ட் கோளாறினை நீக்குவதற்காக திரும்ப அழைத்துள்ளது.
சீட் பெல்ட்டில் என்ன கோளாறு ?
ஸ்கோடா, ஃபோக்ஸ்வாகனின் மேக் இன் இந்தியா கார்களில் எதிர்பாராமல் ஏற்படுகின்ற முன்பக்க மோதல் ஏற்பட்டால், “பின்புற இருக்கை பெல்ட்களின் பக்கிள் லாட்ச் பிளேட் உடைந்து போகலாம், அல்லது/மற்றும் பின்புற மைய இருக்கை பெல்ட் அசெம்பிளியின் வலைப்பின்னல் மற்றும் பின்புற வலது இருக்கை பெல்ட்டின் பக்கிள் பழுதடையக்கூடும்” என கண்டறியப்பட்டது.
இவ்வாறு உடைந்தால் பின் இருக்கையில் உள்ள பயணிகளுக்கு பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதனால் வாகனங்களை திரும்ப பெற்று இலவசமாக மாற்றித் தரப்பட உள்ளது.
பாதிக்கப்பட்ட வாகனங்களை கண்டறிய ஸ்கோடா இணையதளம் — https://www.skoda-auto.co.in/aid/recall-campaigns
ஃபோக்ஸ்வாகன் வாகனங்களை அறிந்து கொள்ள — https://www.volkswagen.co.in/en/owners-and-services/customer-information/recall-campaign.html
வாகனங்களில் VIN நெம்பரை கொண்டு உங்கள் வாகனம் பாதிக்கப்பட்டுள்ளதால் என அறிந்து கொண்டு அருகாமையில் உள்ள டீலரை அனுகலாம்.