சென்னை: ‘முதல்வர் ஸ்டாலினுக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது’ என்று கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தென் சென்னை வடக்கு (மே) மாவட்ட அதிமுக செயலாளர் தி.நகர் சத்யா ஏற்பாட்டில் தியாக ராயநகர், முத்துரங்கன் சாலையில் நேற்று பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று பேசியதாவது: தமிழகத்தில் திமுக அரசும், முதல்வர் ஸ்டாலினும் கடந்த 4 ஆண்டு ஆட்சியில் எந்த ஒரு பெரிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. இந்த ஆட்சியில் அவரது மகன் உதயநிதியை துணை முதல்வராக்கியது மட்டும்தான் மிகப்பெரிய சாதனை. தங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஆட்சி அதிகாரத்தில் தொடர வேண்டும் என்பதே ஸ்டாலினின் நோக்கம்.
தமிழகத்தில் 2026 தேர்தல், குடும்ப ஆட்சிக்கும், வாரிசு அரசிய லுக்கும், மன்னராட்சிக்கும் முடிவு கட்டும் தேர்தல். இந்த ஆட்சி எப்போது அகற்றப் படும் என்று தமிழக மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். பாஜகவின் கூட்டணி வைத் தால் திமுகவுக்கு ஏன் பதற்றம், கோபம் வருகிறது ? பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது என்ற ஸ்டாலினின் கனவு, கானல் நீராகிவிட்டது. பாஜகவுடன்
கூட்டணி வைத்தவுடன் ஸ்டாலின் பதறுகிறார். ஸ்டாலினுக்கு தேர் தல் ஜூரம் வந்துவிட்டது. அதிமுக கூட்டணி வெற்றி கூட்டணி. எங்கள் கூட்டணியில் பல கட்சிகள் வந்து சேர இருக்கின்றன. அப்போது இக்கூட்டணி எவ்வளவு பலம் வாய்ந்தது என்பதை உணர்வீர்கள். எதிரியை வீழ்த்த, வாக்குகள் சித றாமல் வெற்றி பெற, இந்த அரசி யல் வியூகத்தை அமைத்திருக் கிறோம்.
எக்காரணத்தைக் கொண்டும் திமுக ஆட்சிமீண்டும் தமிழகத்தில் வந்து விடக்கூடாது. அகற்றப்பட வேண்டும் என்று மக்கள் கருது கிறார்கள் அவர்களின் எண்ணப் படி நாங்கள் கூட்டணி அமைத் திருக்கிறோம். திமுகவுக்கு ஆட்சி, அதிகாரம் தான் முக்கியம். கொள்கையும், கோட்பாடும் இல்லை. பாஜக, காங்கிரஸ் எனமாறி மாறி கூட்டணி வைப்பார்கள். பழனிசாமியை மிரட்டி பணிய வைத்திருப்பதாக ஸ்டாலின் கூறுகிறார்.
இரு கட்சி களும் மகிழ்ச்சியாக கூட்டணி அமைத்திருக் கிறோம். எனக்கு மடியில் கனமில்லை, வழி யில் பயமில்லை. கடந்த 4 ஆண்டுகளில் ஊழல் செய்து சம்பாதித்த பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டி ருக்கும்கட்சிதான்திமுக.அதனால் தான் அமலாக்கத் துறை, வருமான வரித் துறையைக் கண்டு திமுக அஞ்சிக் கொண்டிருக்கிறது. அமைச்சர்களும் அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் அதிமுக மகளிரணி தலைவி பா.வளர்மதி, மாவட்ட செயலாளர்கள் விருகை ரவி, ஆர்.எஸ். ராஜேஷ், டி.ஜி.வெங்கடேஷ் பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.