ஜம்மு காஷ்மீரின் பகல்காம் சுற்றுலா தளத்தில் ஏப்ரல் 22 ஆம் தேதி பாகிஸ்தானின் ஆதரவு பயங்கரவாதிகள் திடீரென கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 அப்பாபி பொதுமக்கள் உயிரிழந்தனர். இதையடுத்து இந்தியா பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என மறைமுகமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இச்சூழலில் நேரடியான தாக்குதலை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக தொடங்கி பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் 9 பயங்கரவாத குழுக்கலை தரைமட்டமாக்கியது.
பாகிஸ்தானும் இந்தியாவை தாக்க வேண்டும் என 15 முக்கிய நகரங்களை தாக்க முயன்றது. ஆனால் அதை இந்தியா முறியடித்தது. இதையடுத்து காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட எல்லையோர இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.
போர் பதற்றம் காரணமாக இரு நாடுகளும் முக்கிய இடங்களில் பாதுகாப்பை அதிகரித்து பல முக்கிய முக்கிய நிகழ்வுகளுக்கு தடை விதித்துள்ளது. அந்த வகையில் பாகிஸ்தானில் நடைபெற்று வந்த பிஎஸ்எல்லை அந்த நாட்டு தற்காலிகமாக நிறுத்தியது. அதேபோல் இந்தியாவும் ஐபிஎல்-ஐ ஒரு வார காலத்திற்கு ஒத்திவைத்துள்ளது.
பிஎஸ்எல் நடத்த மறுப்பு?
இந்த நிலையில், பாகிஸ்தானின் பிஎஸ்எல் தொடரை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் மறுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, பாகிஸ்தான் பிஎஸ்எல்-ஐ நிறுத்தி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிட்டது. அந்நாட்டுக்கு இது தொடர்பாக கோரிக்கையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வைத்தது. ஆனால் இந்த கோரிக்கையை ஐக்கிய அரபு அமீரகம் மறுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
PTI- யின் அறிக்கையின்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வாரியம் ‘இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றத்தால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு கவலைகள்’ காரணமாகக் குறிப்பிட்டுள்ளது. சமீப ஆண்டுகளில் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021 இன் ‘இந்தியா’ பதிப்பு, ஐபிஎல் பதிப்புகள் மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025ன் போது இந்தியா போட்டிகளை நடத்தியதன் மூலம் எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் பிசிசிஐயுடன் வலுவான உறவை அனுபவித்து வருகிறது என கூறப்படுகிறது.
யுஏஇ கிரிக்கெட்டை ரசிக்கும் பன்முகத்தன்மை கொண்ட தெற்காசிய மக்களைக் கொண்டுள்ளது. இத்தகைய பதட்டமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் பிஎஸ்எல் போன்ற போட்டியை நடத்துவது நல்லிணக்கத்தைக் கெடுக்கும் என்றும் பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தும் மற்றும் சமூகங்களுக்கு இடையே தேவையற்ற உராய்வைத் தூண்டும் என அந்நாடு கருதுவதாக கூறப்படுகிறது.
மேலும் படிங்க: சொந்த நாட்டுக்காரனே அடிக்கிறான்! கலவரக் காடான பாகிஸ்தான்..சோலி முடிஞ்சது