இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் 2025 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு மற்றும் பதான்கோட்டில் விமானத் தாக்குதல் எச்சரிக்கைகள் கேட்கப்பட்டதை அடுத்து, தர்மசாலாவில் நடைபெற இருந்த பிபிகேஎஸ் மற்றும் டிசி இடையேயான போட்டி நேற்று கைவிடப்பட்டதைத் தொடர்ந்து ஐபிஎல் 2025 இன் எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவி வந்தது. இந்த நிலையில், “நாடு போரில் இருக்கும்போது கிரிக்கெட் நடப்பது நன்றாகத் தெரியவில்லை” என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது. […]
