தாய் நாட்டுக்கு திரும்பிய வெளிநாட்டு வீரர்கள்.. ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ எச்சரிக்கை!

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம்  காரணமாக இத்தொடரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், வரும் வாரங்களில் மீண்டும் ஐபிஎல் தொடர் எப்போது வேண்டுமானாலும் தொடங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இச்சூழலில் வெளிநாட்டு வீரர்கள் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பி உள்ளனர். அவர்கள் மீண்டும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு குறைவு. இது ஐபிஎல் அணிகள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.  

அதே வேளையில் ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் ஐபிஎல் போட்டிகள் தொடங்க முடியுமா? என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. ஏனென்றால் இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது தனியாகவும் வாய்ப்புள்ளது. ஒருவேளை போர் பதற்றம் மேலும் அதிகரித்தால் ஐபிஎல் தொடர் நடத்தப்பட வாய்ப்பு இல்லை. அதுவே போர் பதற்றம் குறைந்தால் ஐபிஎல் தொடர் நடத்தப்படும். 

அப்படி நடத்தப்படும் பட்சத்தில் ஐபிஎல் நிர்வாகம் தொடரை நடத்த தற்காலிக திட்டத்தை வகுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது வீரர்களின் பாதுகாப்பை கருதில் கொண்டு தொடரை தென்னிந்தியாவில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்திட்டத்திற்கு ஏற்ப ஐபிஎல் நிகழ் தயாராக இருக்குமாறு பிசிசிஐ அறிவுறுத்தி உள்ளது. 

ஒருவேளை ஒரு வாரத்திற்கு பிறகு ஐபிஎல் தொடர் நடத்த முடியவில்லை என்றால் செப்டம்பர் மாதத்தில் தான் மீதமுள்ள போட்டிகளை நடத்த முடியும். ஏனென்றால் ஜூன் மாதத்தில் இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இத்தொடரை மாற்றி அமைக்க வாய்ப்பு இல்லை. அப்படி செய்தால், அது சர்வதேச அட்டவணையில் குழப்பத்தை ஏற்படுத்தும்.

செப்டம்பரில் நடத்தலாம்

செப்டம்பர் மாதத்தில் ஆசிய கோப்பை  நடைபெற வேண்டும். ஆனால் ஆசிய கோப்பையில் முக்கிய அணிகளாக இருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மீண்டும் ஒன்றாக விளையாடுவதற்கு வாய்ப்புகள் இல்லை. இதற்கு தற்போது நடைபெற்று வரும் போர் பதற்றம் காரணம் என பார்க்கப்படுகிறது. மேலும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்மி இருக்கிறார் எனவே ஆசிய கோப்பையை நடத்த சாத்தியம் இல்லை. அந்நேரத்தில் ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளை செப்டம்பர் மாதங்களில் நடத்த முடியும். 

மேலும் படிங்க: பாதியில் நின்ற பஞ்சாப் டெல்லி போட்டி ரிசல்ட் என்ன? பிசிசிஐ அந்தர் பல்டி!

மேலும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் கவாஸ்கர், சச்சின், விராட் கோலியால் முறியடிக்கப்படாத இந்திய பேட்ஸ்மேனின் சாதனை..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.