சீனாவிடம் இருந்து எச்கியூ9 வான் பாதுகாப்பு கவசங்களை கடந்த 2021-ம் ஆண்டில் பாகிஸ்தான் வாங்கியது. இதன்மூலம் எதிரிகளின் போர் விமானங்கள், ட்ரோன்கள், ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழிப்போம் என்று பாகிஸ்தான் ராணுவம் மார்தட்டி வந்தது.
ஆனால், கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தபோது அந்த நாட்டின் எச்கியூ9 வான் பாதுகாப்பு கவசம் தடுக்கவில்லை. அந்த கவச அமைப்பால் பிரம்மோஸ் பாகிஸ்தானுக்குள் ஊடுருவியதைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் கூறும்போது, “சீனாவின் எச்கியூ9 வான் பாதுகாப்பு கவசத்தை நம்பி பாகிஸ்தான் முழுமையாக ஏமாந்திருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான சண்டையில் சீனாவின் ஜேஎப்17, ஜே-10சிஇ ரக போர் விமானங்களை பாகிஸ்தான் விமானப் படை பயன்படுத்தியது.
ஆனால் சீன போர் விமானங்களால் இந்தியாவின் ரஃபேல், சுகோய் போர் விமானங்களை எதிர்கொள்ள முடியவில்லை. எனவே மீண்டும் அமெரிக்க தயாரிப்பான எப்16 ரக போர் விமானங்களை பாகிஸ்தான் விமானப்படை பயன்படுத்த தொடங்கி உள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.