ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. இதற்கிடையில் ஏப்ரல் 22 ஆம் தேது ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் பகுதியில் பாகிஸ்தானின் ஆதரவு பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதல் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதனால் இந்தியா ஆத்திரமடைந்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இச்சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆபரேஷன் சிந்தூர் என்ற இராணுவ நடவடிக்கையின் மூலம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த 9 பயங்கரவாத முகாம்களை தரமாட்டமாக்கியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்தது.
இதன் காரணமாக கடந்த 8 ஆம் தேதி ஐபிஎல் தொடரை பாதியில் நிறுத்தி ஒருவார காலத்திற்கு ஒத்திவைத்தனர். இந்நிலையில், நேற்று இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்க விரைவில் தொடங்க உள்ளது. வரும் மே 16, 17 தேதிகளில் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும்.
இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ஓர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது அந்த அணியின் முக்கிய பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட்டுக்கு தோல்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மீண்டு தொடங்கும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பார் என சொல்ல முடியாது. அவர் இத்தொடரில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. இது ஆர்சிபி அணிக்கு பெரும் பிண்ணடைவாக பார்க்கப்படுகிறது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி சிறப்பான செயல்பாட்டை வெளிபடுத்தி வருகிறது. அந்த அணி விளையாடிய 11 போட்டிகளில் 8ல் வெற்றி பெற்றும் 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி சிறப்பாக விளையாடி வருவதால், அந்த அணி நிச்சயம் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையுடன் அந்த அணியின் ரசிகர்கள் உள்ளனர்.
மேலும் படிங்க: ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும் தேதி மற்றும் இடம்? வெளியான தகவல்!
மேலும் படிங்க: ரோகித் சர்மா இடத்தை பிடிக்க போகும் 23 வயது இளைஞர்! ஓப்பனராக இறங்க வாய்ப்பு!