ஐபிஎல் மீண்டும் தொடங்கினால்… ஆர்சிபி, குஜராத் அணிக்கு மிகப்பெரிய சிக்கல்!

மார்ச் மாதம் தொடங்கிய ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் பதட்டம் காரணமாக திடீரென்று நிறுத்தப்பட்டது. தரம்சாலாவில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின் போது பாதுகாப்பு காரணங்களுக்காக பாதியில் நிறுத்தப்பட்டு வீரர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் வெளிநாட்டு வீரர்கள் தற்போது அவர்களது சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர். முதலில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் அக்டோபர் அல்லது செப்டம்பர் மாதம் நடைபெறலாம் என்று தகவல்கள் வெளியானது. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக வீரர்கள் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பினர்.

மேலும் படிங்க: ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும் தேதி மற்றும் இடம்? வெளியான தகவல்!

இந்நிலையில் போர் பதற்றம் குறைந்துள்ளதால் அடுத்த வாரமே ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த வீரர்கள் மீதமுள்ள போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சில அணிகளுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விரைவில் நடக்க உள்ளதால் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா வீரர்கள் அதற்கான பயிற்சி ஈடுபட உள்ளனர். இங்கிலாந்து வீரர்கள் அடுத்ததாக இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளதால் அதற்கான பயிற்சியில் ஈடுபட உள்ளனர். இதன் காரணமாக ஐபிஎல் தொடரை இந்த நாட்டு வீரர்கள் மிஸ் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐபிஎல் அணிகள் தங்களது மொத்த காம்பினேஷனை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக ஆர்சிபி மற்றும் குஜராத் போன்ற அணிகள் வெளிநாட்டு வீரர்களை நம்பி உள்ளனர். ஆர்சிபி அணியில் பில் சால்ட், ஜோஷ் ஹேசில்வுட், குஜராத் அணியில் ஜோஸ் பட்லர், டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் மிட்சல் ஸ்டார்க் போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாடிய அவர்கள் இல்லாமல் போனால் அந்த அணிகளின் வெற்றியின் தாக்கம் ஏற்படும். ஒருவேளை இந்த மூன்று நாட்டு வீரர்களும் வரவில்லை என்றால் மீதமுள்ள நாட்டின் வீரர்களை வைத்து ஒவ்வொரு அணிகளும் விளையாட வேண்டி இருக்கும். உதாரணமாக ஸ்ரீலங்கா,  மேற்கிந்திய தீவுகள் என்று நியூசிலாந்து அணிகளை சேர்ந்த வீரர்களை வைத்து விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

PL 2025 REMAINING MATCHES.

– The IPL likely to be extended till 30th May.

– Bengaluru, Chennai and Hyderabad to host the remaining matches.

– New scheduled to be released by tonight to IPL teams. (Express Sports). pic.twitter.com/rXPCPdpaNS

— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 11, 2025

மேலும் படிங்க: ரோகித் சர்மா இடத்தை பிடிக்க போகும் 23 வயது இளைஞர்! ஓப்பனராக இறங்க வாய்ப்பு!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.