ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும்.. இந்த 3 அணிகளுக்கு பெரிய பாதிப்பு!

ஐபிஎல் 2025 போட்டி மார்ச் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட அனைத்து லீக் போட்டிகளும் முடிவடைந்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக தற்காலிகமாக மீதமுள்ள போட்டிகள் நிறுத்தப்பட்டது. கடந்த வாரம் தரம்சாலாவில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து மீண்டும் போட்டிகள் எப்போது தொடங்கும் என்ற கேள்வி அனைவரது மத்தியில் இருந்தது. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பினர்.

தற்போது இரு நாடுகளுக்கும் இடையே அமைதி பேச்சு வார்த்தை ஏற்பட்டுள்ள நிலையில், வரும் மே 17ஆம் தேதி முதல் மீண்டும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்கான போட்டிய அட்டவணையை பிசிசிஐ இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியிட்டது. ஆனால் தற்போது ஒவ்வொரு அணியிலும் உள்ள சில வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவது சந்தேகத்தை எழுப்பி உள்ளது. சர்வதேச போட்டிகள் நடைபெற உள்ளதால் வெளிநாட்டு வீரர்கள் பிளே ஆப் வரை மட்டுமே இருப்பார்கள். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெற உள்ள நிலையில், ஆஸ்திரேலியா வீரர்கள் எப்போது நாடு திரும்ப வேண்டும் என்பது அவர்களது முடிவு என்று ஆஸ்திரேலியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் தென்னாபிரிக்கா வீரர்களும் இருப்பது சந்தேகமே. அதே சமயம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஒரு நாள் தொடர் நடைபெற உள்ளதால் சில வீரர்கள் இருக்க மாட்டார்கள். வரும் மே 27ஆம் தேதி முதல் பிளே ஆப் போட்டிகள் தொடங்குகிறது. ஐபிஎல் இறுதி போட்டி ஜூன் 3ம் தேதி நடைபெற உள்ளது. ஆனால் மே 29ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையே ஒரு நாள் தொடர் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான அணியை மேற்கிந்திய தீவுகள் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், தற்போது இங்கிலாந்தும் அறிவித்துள்ளது. ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேக்கப் பெத்தேல், ஜோஸ் பட்லர், வில் ஜாக்ஸ் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோர் ஒரு நாள் தொடருக்கான அணியில் இடம் பெற்றுள்ளனர்.

மறுபுறம் மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த ஷெர்பேன் ரூதர்ஃபோர்டு, ரொமாரியோ ஷெப்பர்ட், ஷமர் ஜோசப் ஆகியோர் ஒரு நாள் அணியில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் பிளே ஆப் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு நாடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆர்சிபி, குஜராத், டெல்லி போன்ற அணிகளுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும். தற்போது புள்ளி பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் முதல் இரண்டு இடங்களை பிடித்து உள்ளனர். இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் தங்களது பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்ய முடியும். மறுபுறம் மும்பை இந்தியன்ஸ் அணி கிட்டத்தட்ட பிளே ஆப் வாய்ப்பை இறுதி செய்துள்ளது. நான்காவது இடத்திற்கு டெல்லி மற்றும் பஞ்சாப் இடையே போட்டி இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.