அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் சிறையில் இருந்து 10 கைதிகள் வெள்ளியன்று இரவு தப்பியோடி உள்ளனர். சிறையில் உள்ள கழிவறையை உடைத்து அதன் பின்னால் இருந்த பைப்புகளை அகற்றி துளை மூலம் வெளியேறியது தெரியவந்தது. வெள்ளியன்று நள்ளிரவு 12:20 மணிக்கு சிறையில் இருந்து தப்பிய அவர்கள் பின்னர் சிறைச்சாலை சுவர் ஏறி குதித்து இரவு 1 மணி அளவில் நெடுஞ்சாலையை கடந்து தப்பியுள்ளனர். வழக்கமாக காலை 8:30 மணிக்கு கைதிகளின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் போது 10 பேர் தப்பியோடியது […]
