ஒடிசாவில் மின்னல் தாக்கி 9 பேர் பலி

புவனேஷ்வர்,

ஒடிசா மாநிலத்தில் நேற்று பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அம்மாநிலத்தின் கோரபுட், ஜஜ்பூர், கஞ்சம், தன்கனல், கஜபதி போன்ற மாவட்டங்கள் கனமழை பெய்தது.

இந்நிலையில், அம்மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழையின் போது வயலில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் , மழைக்கு மரம் அருகே ஒதுங்கி நின்றவர்கள் என 6 பெண்கள் உள்பட 9 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.