பாகிஸ்தான் உளவுத்துறை வலையமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு முக்கியமான தகவல்களை அனுப்பியதாகவும் ஹரியானாவைச் சேர்ந்த பயண யூடியூபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டிருப்பது இந்த வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவின் ஹிசாரில் வசிக்கும் ஹரிஸ் குமாரின் மகள் ஜோதி, ‘டிராவல் வித் ஜோ’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதற்காக […]
