Virat Kohli : ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழா இன்று முதல் தொடங்குகிறது. முதல் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. முதல் போட்டியே அமர்களமாக இருக்கப்போகிறது. ஏனென்றால் ஆர்சிபி அணி வெற்றி பெற்றால் நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் முதல் அணி என்ற பெருமையைப் பெறும். கொல்க்கத்தா அணி வெற்றிபெற்றால் பிளேஆப் சுற்றுக்கான மயிரிழையிலான வாய்ப்பில் நீடிக்கும். தோற்றால் நடப்பு சாம்பியனான அந்த அணி ஏற்கனவே இந்த தொடரில் பிளேஆப் வாய்ப்புகளை இழந்த சிஎஸ்கே, எஸ்ஆர்ஹெச், ஆர்ஆர் அணிகளுடன் இணைந்து கொள்ளும். ஐபிஎல் பிளே ஆப் ரேசில் ஏழு அணிகள் இருக்கும் அணியில் அதில் இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெளியேறும்.
விராட் கோலிக்கு முதல் போட்டி
அதேநேரத்தில் இப்போட்டி விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு விளையாடும் முதல் போட்டி. இதனால் அவருக்கு மரியாதை கொடுக்கும் விதமாக ஆர்சிபி ரசிகர்கள் மிகப்பெரிய சர்பிரைஸூக்கு ஏற்பாடு செய்துள்ளனர். வழக்கமாக சிவப்பு கலரில் ஜொலிக்கும் பெங்களூரு சின்னசாமி மைதானம் இன்று இரவு வெள்ளை நிற ஜெர்சியில் ஜொலிக்கப்போகிறது. ஆம், விராட் கோலியை கவுரவிக்கும் விதமாக அவர் இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அணிந்திருந்த வெள்ளை ஜெர்சியை ரசிகர்கள் அணிந்து வர உள்ளனர். இந்த சர்பிரைஸை விராட் கோலி எப்படி என்ஜாய் பன்னபோகிறார் என்பதை பார்க்கவும் ஆவலாக இருக்கின்றனர்.
ஆர்சிபி அணிக்கு ஜாக்பாட்
அதேநேரத்தில் இன்றைய போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். இது விராட் கோலிக்கு மட்டுமல்ல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி ரசிகர்களும் கொண்டாடமாக அமையும். விராட் கோலியை கவுரவிக்க ரசிகர்கள் திட்டமிட்டுள்ள இன்றைய நாளில் இது மட்டும் நடந்தால் பெங்களூரு மைதானத்தில் சரவெடி நிச்சயம். இந்த கண்கொள்ளா காட்சியை கொண்டாட ஒட்டுமொத்த விராட் கோலி ரசிகர்களும் தயாராக இருக்கின்றனர்.
ஆர்சிபி பாயிண்ட்ஸ் டேபிள்
ஆர்சிபி அணி பாயிட்ன்ஸ் டேபிளில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 8 போட்டிகளில் ஆர்சிபி அணி வெற்றி பெற்று 16 புள்ளிகளை அந்த அணி பெற்றுள்ளது. ஏறத்தாழ பிளேஆப் சுற்றை அந்த அணி உறுதி செய்துவிட்ட நிலையில், இன்றைய போட்டியில் அந்த வாய்ப்பை முழுமையாக உறுதிசெய்துவிடும். அதேபோல் இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் புள்ளிப் பட்டியலில் டாப் 2 இடத்தை பிடிக்கவும் ஆர்சிபி அணிக்கு வாய்ப்பு இருக்கிறது.
மேலும் படிங்க: ஆர்சிபிக்கு ஏற்பட்ட பிரச்சனை.. கேகேஆர் எதிரான போட்டி நடைபெறுமா?
மேலும் படிங்க: ஐபிஎல் 2025 : டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு விழுந்த அடி.. 3 முக்கிய பிளேயர்கள் இல்லை