Retro நாயகிகள் 04: 161 பேரில் தேர்வான ஒரே ஆள்; கரியரில் உச்சம் தொட்ட நடிப்பு ராட்சசியின் பர்சனல்ஸ்

மிழ் சினிமா எத்தனையோ பேரழகிகளை, நடிப்பில் உச்சம்தொட்ட திறமையான நடிகைகளைப் பார்த்திருக்கு. அதுல 70-கள்ல அழகிலும் நடிப்பிலும் ஜொலித்த நாயகிகள் எப்படி சினிமாத்துறைக்கு வந்தாங்க; என்னென்ன சாதிச்சாங்க; அவங்களோட பர்சனல் லைஃப்னு பல விஷயங்களை இந்த `Retro நாயகிகள்’ சீரிஸ் உங்களுக்கு சொல்லப்போகுது. இன்னிக்கு, பேரைச் சொன்னாலே இப்போ வரைக்கும் தமிழ் சினிமா மட்டுமில்லாம, மொத்த தென்னிந்திய சினிமா ஃபீல்டும் அதிருகிற, பாராட்டுகிற நடிகை சரிதா பத்திதான் தெரிஞ்சுக்கப்போறீங்க.

மரோசரித்ரா
மரோசரித்ரா

அந்த பொண்ணோட பேரு அபிலாஷா. பிறந்தது ஆந்திராவோட குண்டூர்ல. அபிலாஷா ஒருநாள் ஸ்கூல்ல இருந்து தன்னோட வீட்டுக்கு வர்றா, ஹால்ல அவளோட அப்பாவும், அவரோட ஃப்ரெண்டும் உட்கார்ந்திருக்காங்க. அவங்க ரெண்டு பேருக்கும் காபி கொண்டு வந்து கொடுத்த அந்த சிறுமிகிட்ட, ’நீ சினிமாவுல நடிக்கிறியாம்மா’ன்னு கேட்கிறார் அவ அப்பாவோட நண்பர். நான் மாட்டேன் அங்கிள்னு சொல்லிட்டு உள்ள போயிடுறா அபிலாஷா

அந்த வீட்டைப் பொறுத்தவரைக்கும், தாத்தா பாட்டி வீட்டுக்குப் போனா தான் சினிமாவே பார்க்க முடியும். அப்படி சினிமாவுக்குப் போனாலும் படம் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்திலேயே தூங்கிடுவாளாம் அபிலாஷா. ’நானாவது சினிமாவுல நடிக்கிறதாவது’ன்னு நினைச்சுக்கிட்டு உள்ள போன அபி இந்த வாய்ப்பை விட்டுக் கொடுக்கவே மாட்டேன்னு அடுத்த நிமிஷமே முடிவெடுக்கிறா. அதுக்குக் காரணம் நடிகர் கமல்ஹாசன்.

நடிகை சரிதா
நடிகை சரிதா

’உன்னை நடிக்க கேட்ட படத்தோட ஹீரோ கமல்னு சொன்னதும், ‘நான் அந்தப் படத்துல நடிக்கிறேன் அங்கிள்’னு சொல்லிடுறா. அந்த அங்கிள் கிளம்பினதும், தங்களோட பொண்ணை சினிமாவுல நடிக்க வைக்கிறது தொடர்பா வீட்ல டிஸ்கஷன் நடக்குது. சரி, அபிலாஷா நடிக்கட்டும்னு முடிவெடுக்கிறாங்க. அடுத்த நாள் ஆடிஷனுக்கு போறாங்க.

அங்க டைரக்டர் கே. பாலச்சந்தரை யார்னு தெரியாமலே மீட் பண்றா. ஒரு பாட்டுப் பாடிக் காட்டும்மான்னு கேட்கிறாரு. அந்த சிறுமியும் பாடுறா. கூடவே பாட்டுக்கு ஏத்தபடி நடிக்கவும் செய்யுறா. அங்க இருந்த எல்லாரும் ’யாருடா இந்தச் சின்னப்பிள்ளை’ என்கிற ரேஞ்சுல சிரிச்சிருக்காங்க. அடுத்ததா மேக்கப் டெஸ்ட். அதுலயும் பாஸ். அபிலாஷா, நடிகை சரிதா ஆகுறாங்க. இந்தியத் திரையுலகம் மொத்தமும் திரும்பிப் பார்த்த ’மரோசரித்ரா’ படத்தோட ஹீரோயின் ஆகுறாங்க.

நடிகை சரிதா
நடிகை சரிதா

’’அந்தப் படத்தோட ஹீரோயின் கேரக்டருக்காக அதுவரைக்கும் 161 பெண்களை ஆடிஷன் பண்ணி ரிஜெக்ட் பண்ணியிருந்தார் கே.பாலச்சந்தர் சார். அவர் ஆடிஷன் பண்ண 162 பொண்ணு நான்’’னு மகிழ்ச்சியா பேட்டி ஒண்ணுல சொல்லியிருக்கிற சரிதாவுக்கு, மரோ சரித்ரா வாய்ப்பு ரெண்டு முறை கை நழுவப் பார்த்திருக்கு. ஆனா, தன்னோட நடிப்புத் திறமையால அந்த வாய்ப்பைத் தக்க வெச்சிருக்காங்க சரிதா. என்ன நடந்ததுன்னு சரிதாவே ஒரு இன்டர்வியூவுல சொல்லியிருக்காங்க.

’’லவ் சீன்ல எனக்கு ரொமான்டிக் ஃபீலிங் காட்ட வரலை; இந்தப் பொண்ணு வேணாம்னு எல்லோரும் சொல்ல, கே.பி சார் மட்டும் தான் எனக்காகப் பேசினார். ரெண்டாவது நாள் ஷூட்டிங்ல ’மரோசரித்ரா’ படத்தோட ஒரு முக்கியமான சீன்ல என்ன நடிக்க சொன்னாங்க. அன்னிக்கு நான் சரியா நடிக்கலைன்னா, அந்தப் படத்துல நான் தொடர முடியாதுன்னு சொல்லிட்டாங்க. ஆனா, அன்னிக்கு ஒரே டேக்ல அவங்க எதிர்பார்த்த மாதிரியே நடிச்சேன். படமும் ரிலீஸாச்சு. சூப்பர் டூப்பர் ஹிட். திரும்ப படிக்கலாம்னு முடிவெடுத்த எனக்கு, தமிழ்ல தப்புத்தாளங்கள், நூல்வேலின்னு வரிசையா வாய்ப்புகள் வர ஆரம்பிச்சிது.’’

அச்சமில்லை அச்சமில்லை
அச்சமில்லை அச்சமில்லை

அப்புறமென்ன, ஆணிவேர், நெற்றிக்கண், பொண்ணு ஊருக்குப் புதுசு, கீழ் வானம் சிவக்கும், உறவைக் காத்த கிளி, மௌன கீதங்கள், அக்னிசாட்சி, அச்சமில்லை அச்சமில்லை, தண்ணீர் தண்ணீர், கோயில் புறா, நெஞ்சில் ஒரு ராகம், அம்மா, மலையூர் மம்மட்டியான், புதுக்கவிதை, வண்டிச்சக்கரம், கல்யாண அகதிகள், வேதம் புதிது, பூ பூவா பூத்திருக்கு, மங்கை ஒரு கங்கை, ராசாவே உன்ன நம்பி…ன்னு சரிதாவோட அசுர நடிப்பும், வட்டக்கண்களும், சொப்பு மூக்கும் தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியை ஆள ஆரம்பிச்சிது. அந்த சாக்லெட் நிற முகத்துல வராத உணர்வுகளே இல்லையோன்னு தென்னிந்திய சினிமா உலகம் பிரமிச்சுப் பார்த்துச்சு.

நடிப்புல பிசியா இருக்கும்போதே டப்பிங்கும் கொடுத்துட்டு இருந்திருக்காங்க சரிதா. தன் கரியரோட உச்சத்துல இருக்கிறப்போ ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை பார்த்திருக்கிறார் சரிதா. சில நேரங்கள்ல தீபாவளி, பொங்கல் அப்போ தான் நடிச்சதுல எந்தப் படம் எல்லாம் ரிலீஸ் ஆகியிருக்குன்னு தெரியாத அளவுக்கு தொடர் ஷூட்டிங்ல இருந்திருக்காங்க. ’நீங்க நடிச்ச படத்தோட நூறாவது நாள் ஃபங்க்ஷன் மேடம்’னு அவங்களை இன்வைட் பண்ணும்போதுதான் ’ஓ… இந்தப் படம் இந்த அளவுக்கு நல்லா ஓடியிருக்கா’ன்னு தெரிஞ்சுக்கிற அளவுக்கு பிஸியா இருந்திருக்காங்க. 

நடிகை சரிதா
நடிகை சரிதா

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்னு சரிதா எப்படி ஒருநாளைக்கு 18 மணி நேரம் நடிச்சாங்கன்னு ஆச்சரியப்பட்டீங்கன்னா, அதுக்கான பதிலை அவங்களே ஓர் இன்டர்வியூவுல சொல்லியிருக்காங்க. ’’ஒரு படத்தோட ஷூட்டிங் முடிஞ்சு அடுத்தப் படத்தோட கேரக்டருக்கான காஸ்ட்யூம் மாத்துறப்போவே நான் அந்த கேரக்டருக்குள்ள போயிடுவேன், அவ்வளவுதான்.’’

தெலுங்கு தாய்மொழியா இருந்தாலும், சரிதாவோட இன்னொரு பிளஸ் தெளிவான தமிழ் உச்சரிப்பு. ரெண்டு, மூணு பக்கம் டயலாக் கொடுத்தாலும் ஒரே டேக்ல ஓகே செஞ்சிடுவாங்கன்னு டைரக்டர்ஸ் பாராட்டுவாங்களாம். நடிச்சது 150 படங்களுக்கும் மேலே, மத்த நடிகைகளுக்கு குரல் கொடுத்தது 200 படங்களுக்கு மேலே. கே. பாலச்சந்தரின் ஆஸ்தான நாயகி, நடிப்பு ராட்சசி என வலம் வந்த சரிதாவுக்கும் நடிகர் முகேஷுக்கும் காதல் வர, அது திருமணத்துல முடியுது. ரெண்டு ஆண் குழந்தைகள் பிறக்கிறாங்க. பசங்க வளர்ந்த பிறகு, தன் கரியரோட செகண்ட் இன்னிங்ஸை ஆல்பம், ஃப்ரெண்ட்ஸ், ஜூலி கணபதி, ஜூன் ஆர்னு ஆரம்பிச்சாங்க. இடையில தன் தோழி நடிகை ராதிகாவோட ‘செல்வி’ சீரியல்ல நடிச்சாங்க. இப்போ சமீபத்துல சிவகார்த்திகேயனோட அம்மாவா ‘மாவீரன்’ படத்துலேயும் கலக்கியிருப்பாங்க.

நடிகை சரிதா
நடிகை சரிதா

`அக்னி சாட்சி’யில தன் கேரக்டரோட தவிப்பையெல்லாம் கண்கள்லேயே காட்டியிருப்பாங்க, ஆணிவேர்ல தன் காதலையெல்லாம் பேசாமலே சொல்லியிருப்பாங்க, `அச்சமில்லை அச்சமில்லை’ படத்தோட கிளைமேக்ஸ்ல சரிதாவோட அந்த ரெளத்ரம், கீழ் வானம் சிவக்கும்ல சிவாஜியோட மருமகளா டஃப் கொடுத்ததுன்னு சரிதாவோட நடிப்புத்திறமையை கொண்டாடிக்கிட்டே இருக்கலாம். சிறந்த நடிகைக்கான அவார்டை மட்டுமே கிட்டத்தட்ட 10 தடவை வாங்கியிருக்கிறார் சரிதா. அப்புறம் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்க்கான அவார்ட்ஸ், கலைமாமணி விருதுன்னு சரிதாவின் திறமையைக் கொண்டாட இந்தவொரு கட்டுரைப் போதாது. இந்த நடிப்பு அரசி வெள்ளித்திரையில ஜொலிச்சிக்கிட்டே தான் இருந்தாங்க; இருப்பாங்க… வி லவ் யூ சரிதா மேம்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.