சாத்தான்குளம்: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே சாலையோர கிணற்றில் கார் மூழ்கிய சம்பவத்தில், கோவையைச் சேர்ந்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சி வெள்ளாளன் விளையில் உள்ள கிறிஸ்தவ ஆலய பிரதிஷ்டை விழாவில் கலந்துகெலாள்வதற்காக கோயம்புத்தூரில் இருந்து குடும்பத்துடன் காரில் வந்த இவர்கள், சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளம் பகுதியில் சாலையோரத்தில் இருந்த கிணற்றுக்குள் கார் பாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று காலை (மே 17) அன்று கோவையைச்சேர்ந்த சைனி கிருபாகரன் குடும்பத்தினர் […]
