சென்னை: சாத்தான்குளம் அருகே கார் சாலையோரம் உள்ள கிணற்றுக்குள் பாய்ந்த விவகாரத்தை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் சாலைகளின் ஓரங்களில் உள்ள பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட 5 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். நேற்ற மாலை 4 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றது. சாத்தான்குளம் அருகே சிந்தாமணிக்கும் மீரான்குளத்துக்கும் இடையே […]
