ஆசிய கோப்பை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேஷ் உள்ளிட்ட ஆசிய நாடுகள் பங்கேற்று வருகிறது. இச்சூழலில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பகல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவியது.
தற்போது இந்த மோதல் முடிவுக்கு வந்திருந்தாலும், பாகிஸ்தானுடன் இந்தியா எப்படி விளையாடும், இதனால் இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் மோதல் வருமா? உள்ளிட்ட பல கேள்விகள் எழுந்தன. இதற்கிடையில் ஆசிய கோப்பை தொடரில், இந்தியா பங்கேற்காது என்ற தகவல் பரவி வந்தது. ஆனால் இதற்கு பிசிசிஐ தரப்பில் இருந்து மறுப்பு தெரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா கூறியதாவது, ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா பங்கேற்காது என்ற தகவல் உண்மை அல்ல. தற்போது ஐபிஎல் மீதும் ஜூன் மாதம் தொடங்க இருக்கும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் மீதும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். மேலும், ஆசிய கோப்பை விலகுவது தொடர்பாக நாங்கள் எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை என கூறி உள்ளார்.
ஆசிய கோப்பையில் கடந்த 1984ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 16 தொடர்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 3 தொடர்கள் டி20 ஆக நடத்தப்பட்டது. இந்த ஆசிய கோப்பையை இதுவரை இந்தியா மற்றும் இலங்கை அணியே வென்றுள்ளது. இந்தியா 10 முறையும் இலங்கை 6 முறையும் வென்றுள்ளது. பாகிஸ்தான் ஒரு முறை கூட இந்த கோப்பையை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: CSK கழட்டிவிடும் இந்த 4 முக்கிய வீரர்கள்!
மேலும் படிங்க: சிஎஸ்கே கேப்டன் இனி ருதுராக் கிடையாது.. புதிய கேப்டனை நியமிக்க திட்டம்?