இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய இராணுவ மோதல் எந்தவித போர் மரபுகளையும் மீறாமல் வழக்கமான களத்தில் இருந்தது என்றும் இஸ்லாமாபாத்திலிருந்து அணுசக்தி சமிக்ஞை எதுவும் வரவில்லை என்றும் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி திங்களன்று வெளியுறவுத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மே 10 அன்று இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட ஒன்பது நாட்களுக்குப் பிறகு, இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான முடிவு இருதரப்பு மட்டத்தில் எடுக்கப்பட்டது என்றும், அமெரிக்காவின் தலையீடு எதுவும் இல்லை […]
