சென்னை அமலாக்கத்துறை இன்று மீண்டும் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. ஏற்கனவே நடத்திய சோதனை அடிப்படையில் அமலாக்கத்துறை டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக தெரிவித்துள்ளது. இதையொட்டி சமீபத்தில், டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் விசாகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 நாட்கள் சோதனை நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்தும் விசாகனிடம் விசாரணை நடத்தப்பட்டதுடன் தமிழ் திரைப்பட அதிபர் ஆகாஷ் பாஸ்கரன் என்பவர் வீடு உள்பட மேலும் 7 இடங்களிலும் […]
