லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஸ்பின்னர் திக்வேஷ் ரதி ஒரு போட்டியில் விளையாட தடை விதித்து ஐபிஎல் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐபிஎல் விதிகளை மீறியதால் அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அபிஷேக் ஷர்மா அவுட் ஆன பிறகு சர்ச்சையான முறையில் சில வார்த்தைகளை கூறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திக்வேஷ் ரதிக்கு இரண்டு முறை அபராதமும், எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டிருந்தது. மூன்றாவது முறையாக அதே தவறை செய்தால் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிங்க: “தோல்விக்கு காரணமே இவர்கள்தான்”.. ஆர்ஆர் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்!
“ஐபிஎல் விதிகளின் படி பிரிவு 2.5 கீழ் திக்வேஷ் ரதி செய்வது லெவல் 1 குற்றமாகும். அவர் ஏற்கனவே பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராகவும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராகவும் இதே தவறை செய்துள்ளார். அப்போது அவருக்கு அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது. தற்போது அவருக்கு மூன்று புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது, இதனால் அவர் அடுத்த ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் மே 22 ஆம் தேதி நடைபெற உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் திக்வேஷ் ரதி விளையாட மாட்டார். இது போட்டியின் நடுவர்களால் எடுக்கப்பட்ட முடிவு” என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சேசிங் செய்த போது அபிஷேக் ஷரமா சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திக்வேஷ் ரதி பந்தை சிக்ஸர் அடிக்க முயன்ற போது ஷர்துல் தாகூரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் அபிஷேக்சர்மா. இந்நிலையில் தனது வழக்கமான செலிப்ரேஷனை செய்தார் திக்வேஷ் ரதி. அப்போது அபிஷேக்சர்மா மற்றும் திக்வேஷ் ரதி இடையே இடையே மைதானத்திலேயே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு இருவரையும் சமாதானப்படுத்தி நடுவர்கள் அனுப்பி வைத்தனர். திக்வேஷ் ரதிக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்ட நிலையில், அபிஷேக் சர்மாவிற்கு போட்டி கட்டணத்தில் இருந்து 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிங்க: IPL 2025: அதிக முறை பிளே ஆஃப் சென்ற அணிகள்.. லிஸ்ட் இதோ!